சேலம் வந்த முதல்வர் கலெக்டர் வா.சம்பத், மலர்கொத்து கொடுத்து வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 7 மார்ச் 2017      சேலம்

தமிழ்நாடு முதலமைச்சர் 07.03.2017 காலை 11.00 மணிக்கு சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள விழாவில் கலந்து கொண்டு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சார்ந்த புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார். விழாவில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சேலம் மாவட்ட எல்லையான சங்ககிரியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் வா.சம்பத், 06.03.2017 அன்று மலர்கொத்து கொடுத்து வரவேற்றார். தமிழ்நாடு முதலமைச்சர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள விழாவில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து விழாவிற்கு சிறப்புரையாற்ற வருகை தரவுள்ளார்கள். சேலம் மாவட்டத்தில் 462 பணிகள் ரூ.115.71 கோடி மதிப்பிலும், நாமக்கல் மாவட்டத்தில் 1,479 பணிகள் ரூ.61.25 கோடி மதிப்பிலும், தருமபுரி மாவட்டத்தில் 113 பணிகள் ரூ.60.33 கோடி மதிப்பிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,917 பணிகள் ரூ.93.55 கோடி மதிப்பில் ஆக மொத்தம் 3971 பணிகள் ரூ.330.84 கோடி மதிப்பில் தொடங்கி வைக்கவுள்ளார்கள். சேலம் மாவட்டத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட எல்லையான சங்ககிரியில் கலெக்டர் வரவேற்றார். இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.ராஜன் மற்றும் அரசுத்துறைகளை அலுவலர்கள் வரவேற்றனர்.

 

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: