முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 142 தேர்வு மையங்களில்

புதன்கிழமை, 8 மார்ச் 2017      சேலம்
Image Unavailable

சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை சேலம், மணக்காடு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மணக்காடு செயின் பால்ஸ் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் வா.சம்பத், ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.   

2017 மார்ச் மாதத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் 08.03.2017 முதல் 30.03.2017 வரை, காலை 09.15 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடத்த தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களால் அறிவிக்கப்பட்டு தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இவ்வாண்டு சேலம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் 508 அரசு, நகரவை, நிதியுதவி, சுயநிதி, மெட்ரிக் பள்ளிகளைச் சார்ந்த 25855 மாணவர்களும், 23876 மாணவிகளும், மொத்தம் 49731 தேர்வர்கள் 142 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். மேலும், தனித் தேர்வர்களாக 1500 மாணவ, மாணவியர்கள் 7 தேர்வு மையங்களில் தேர்வெழுதுகின்றனர். தேர்வுப் பணிக்காக 142 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 142 துறை அலுவலர்களும். தேர்வறை கண்காணிப்பாளர்களாக 2600 ஆசிரியர்களும் 500 அலுவலக பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வுப்பணிகள் செம்மையாக நடைபெறுவதை உறுதிப்படுத்தவும், தீவிரமாக கண்காணிக்கும் பொருட்டும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், முதல்வர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம், சேலம். சங்ககிரி மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், தலைமையில் 80 முதுகலையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கொண்ட பறக்கும்படை உறுப்பினர்களும், 10 தேர்வறைக்கு 1 நிலையான படையினர் வீதம் 240 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும், 27 வழித்தட அலுவலர்கள் மூலம் 142 தேர்வு மையங்களுக்கு வினாத்தாட்கள் ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்படவுள்ளது. எனவே மாணவ, மாணவியர்கள் சிறப்பாக தேர்வெழுதி வெற்றிபெற வாழ்த்துகிறேன். இவ்வாறு கலெக்டர் வா.சம்பத், தெரிவித்தார். இந்த ஆய்வின் பொது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரி மற்றும் தேர்வு மைய பொறுப்பு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்