விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற 10ம் வகுப்பு தேர்வு கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      விழுப்புரம்
4

விழுப்புரம் பேரங்கியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் அரசு பொதுத்தேர்வு மையத்தினை கலெக்டர் இல.சுப்பிரமணியன்   நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அரசு பொதுத்தேர்வினை பார்வையிட்டு கலெக்டர் இல.சுப்பிரமணியன்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:மார்ச் 2017 பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு  முதல் நடைபெற உள்ளது.  விழுப்புரம் மாவட்டத்தில் 549 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 24,042 மாணவர்களும், 23,673 மாணவிகளும் என மொத்தம் 47,715 மாணவ மாணவியர்கள் 170 தேர்வு மையங்களில் இன்று அரசு பொதுத்தேர்வு எழுதி வருகின்றனர்.மேலும் தனித் தேர்வர்களுக்காக 12 தேர்வுமையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  குறிப்பாக மாற்றுத் திறனாளி மாணவர்கள் 90 பேர் தேர்வு எழுத உள்ளனர்.  அவர்களுக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமனம் செய்யப்பட்டு நல்ல முறையில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தேர்வுப் பணியில் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட 3900 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில் தனித் தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்வர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடாவண்ணம் கண்காணிக்கப்பட உள்ளனர்.அனைத்து தேர்வு மைங்களுக்கும் காவல் துறையின் மூலம் பாதுகாப்பு வசதிகள் மற்றும் தேர்வு நாட்களில் தடையற்ற மின்சார வசதிகள், போக்குவரத்து வசதிகள் ஆகியவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் இல.சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்.இந்த ஆய்வின்போது, முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் இராஜேந்திரன், காளிதாஸ், மாவட்ட கல்வி அலுவலர் ராஜமாணிக்கம், பறக்கும்படை கண்காணிப்பாளர்கள் விநாயகம், மௌலினா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: