முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை பார்க் கல்வி குழுமங்கள் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்.

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      கோவை

பார்க் குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் திருப்பூர் மாவட்ட சிலம்பம் சங்க தலைவர் அனுஷா ரவி, பார்க் கல்வி நிறுவனங்களின் மாணவியர்களை சிலம்பாட்டம் செய்து காட்ட ஊக்குவித்தார். சர்வதேச மகளிர் தினம் விழாவின் ஒரு பாகமாக பார்க் நிறுவனங்களினால் துர்கா ’17 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

லிம்கா சாதனை

இது குறித்து அனுஷா ரவி கூறியதாவது, “கடந்த 2012 முதல் மகளிர் தினத்தில் பார்க் குழுமங்களில் நாங்கள் பெண்களை கூர்மைப்படுத்தவும் உருதிப்படுத்தவும் முடிவு செய்தோம். அதனால் 2013 முதல் மகளிர் தினத்தை துர்கா என்று கொண்டாடி வருகிறோம். இந்த வருடம் தமிழகத்தின் பாரம்பரிய கலை வடிவம் மற்றும் ஆயுதத்தை அடிப்படையாக இந்திய தற்காப்பு கலையான சிலம்பாட்டத்தை கற்று கொள்ள எங்கள் மாணவியரை ஊக்குவித்தோம். தற்போது ஆயிரம் மாணவியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புடன் சிலம்பாட்டம் ஆடி சிறப்பித்தனர். என்று கூறினார். இதை தொடர்ந்து சிலம்பாட்ட பயிற்சியாளர் ரவி சந்திரன் கூறியதாவது, நான் தற்போது திருப்பூரில் உள்ள எனது பள்ளியில் 400 முதல் 500 மாணவியர்களுக்கு சிலம்பாட்டம் பயிற்றுவித்து வருகிறேன். அதில் ஒரு பகுதியினர் மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச சிலம்பாட்ட போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளனர் என்றார்.

பார்க் பொறியியல் கல்லூரியின் மாணவி ஜனனி, சிலம்பாட்டம் செய்து மாணவிகளை உற்சாகப்படுத்தினார், அப்போது அவர் கூறியதாவது - நான் கடந்த இரண்டு வருடங்களாக இந்த கலை வடிவத்தை பயிற்சி செய்து வருகிறேன். இந்த கலை எனக்கு கவனத்தையும் கூர்மையையும் அதிகப்படுத்தியுள்ளது. இக்காலத்தில் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டியுள்ளது. சிலம்பாட்டம் கற்றுக்கொள்வதால் ஒரு பெண் இதை சிறந்த தற்காப்பு கலயாக பயன்படுத்திக்கொள்ளலாம். “என்றார்.பார்க் கல்வி நிறுவனங்களின் மாணவியர்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சிக்கு பிறகு தமிழகத்தின் திருப்பூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, ஆத்தூர் ஆகிய மாவட்டங்களில் சிலம்பம் பயிலும் மாணவர்கள் தங்களது சிலம்பாட்டம் நிகழ்ச்சியை மாணவியர்கள் மத்தியில் நடத்தினர்.பார்க் நிறுவனங்களில் நடந்தப்பட்ட இந்த சிலம்பாட்ட நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புத்தகம் மற்றும் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்வதாக பார்க் குழுமங்களிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்