முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்டத்தில் இலவச தொலைபேசி எண் 102 என்ற எண்ணுடன் கூடிய இலவச தாய் சேய் வாகனம்: கலெக்டர் .மு.ஆசியா மரியம் துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 10 மார்ச் 2017      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் இலவச தொலைபேசி எண் 102 என்ற தொலைபேசி அழைப்பு எண்ணுடன் கூடிய இலவச தாய் சேய் வாகன துவக்க நிகழ்ச்சி நேற்று (10.03.2017) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் .மு.ஆசியா மரியம் தலைமையேற்று பொதுமக்களின் சேவைக்காக இலவச தாய் சேய் வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.இச்சேவை அரசு மருத்துவமனையில் பிரசவித்த தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை இலவசமாக அழைத்துச் செல்லுதல், அதன் பின்னர் ஒரு வருடத்திற்கு தடுப்பூசிக்காகவும் மற்றும் இதர சிகிச்சைக்காகவும் அரசு மருத்துவமனைக்கு வரும் தாய் மற்றும் குழந்தைகளை மருத்துவமனையிலிருந்து இல்லத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லவும் இவ்வாகனம் பயன்படும். இச்சேவையினைப் பெற 102 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் இலவச தாய் சேய் வாகனம் அழைக்கும் இடத்திற்கே வந்து தாய் சேய் இருவரையும் அரசு மருத்துவமனைக்கு இலவசமாக அழைத்து வரப்படும். இச்சேவையானது முற்றிலும் இலவச சேவையாகும்.இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (நலப்பணிகள்) டாக்டர். பியர்லின் பேமல் ரூபமதி, கண்காணிப்பாளர் டாக்டர்.செல்வகுமார், ரெட்கிராஸ் மாவட்ட செயலர் ராஜேஸ்கண்ணன், ரெட்கிராஸ் பொருளாளர் கோபு மாதவன், ஒருங்கிணைப்பாளர் மாதையன், மாவட்ட திட்ட உதவியாளர்கள் சதீஷ், ஜோயல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago