கூட்டணி குறித்து தேர்தல் முடிவுகளுக்கு பிறகே முடிவு: பகுஜன் சமாஜ் கட்சி தகவல்

வெள்ளிக்கிழமை, 10 மார்ச் 2017      அரசியல்
mayawati 2017 1 7

லக்னோ - கூட்டணி குறித்து தேர்தல் முடிவுகளுக்கு பிறகே முடிவு செய்யப்படும் என்று பகுஜன் சமாஜ் கட்சி வட்டார தகவல்கள் தெரிவித்தன.

பா.ஜ.க.வுக்கு வெற்றி
உத்தர பிரதேசம், கோவா, உட்பட சமீபத்தில் 5 மாநிலங்களில் தேர்தல் நடந்தது. இதில் உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதியின் ஆட்சி தற்போது நடக்கிறது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புக்கள் வெளியாகியுள்ளது.இதில் பாரதீய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. இதையடுத்து அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ்,  பா.ஜகவை ஓரம்கட்ட, யாருடனும் கூட்டணி வைக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் சூசகம்
மேலும், நான் எப்போதும் பகுஜன் சமாஜ் கட்சியை மரியாதையுடன் நடத்தி வந்துள்ளேன். இதனால், அவர்களிடம் உதவி கேட்பது இயற்கையானது தான். மதவாத சக்திகளை விரட்ட மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்”  இவ்வாறு அவர் கூறினார். இதனால், பகுஜன் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைக்க தயார் என்று  சூசகமாக அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டதாக தெரிகிறது.

யோசனை இல்லை
இந்த நிலையில், தேர்தல் முடிவுகளை காத்திருந்து கவனிக்க உள்ளதாகவும் தற்போதைக்கு  யாருடனும் கூட்டணி வைப்பது குறித்து எந்த யோசனையும் இல்லை என்று  பகுஜன் சமாஜ்வாடி கட்சி வட்டார தகவல்கள்  தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்: