ஆரணி பகுதியில் 6 இடங்களில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 15 மார்ச் 2017      வேலூர்
SEVOOR

ஆரணி சட்டமன்ற தொகுதியில் 6 இடங்களில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. ஆரணி நகரத்தில், பழைய பஸ்நிலையம் எம்ஜிஆர் சிலை, அண்ணாசிலை ஆகிய இடங்களிலும், ஆரணி ஒன்றியங்களில் சேவூர் எம்ஜிஆர் சிலை அருகில், குண்ணத்தூர் கூட்ரோடு, கண்ணமங்கலம் பேரூராட்சி பஸ்நிலையம், வடுகசாத்து பஸ் நிறுத்தம் அருகில் என மொத்தம் 6 இடங்களில் புதன்கிழமை தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தண்ணீர் பந்தலில் குளிர்பானங்கள், தர்பூசணி, வெள்ளரிபிஞ்சு, மோர் ஆகியவற்றை வழங்கி துவக்கி வைத்தார். இவ்விழாவில் செய்யார் எம்எல்ஏ தூசி கே.மோகன், முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர்கள் க.சங்கர், அ.கோவிந்தராசன், மாவட்ட பாசறை செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், பேரவை நிர்வாகி பாரிபாபு, முன்னாள் மாவட்டகவுன்சிலர் சேவூர் ஜெ.சம்பத், பாசறை நிர்வாகி அகிலேஷ்பாபு, மாவட்டதுணை செயலாளர்கள் டி.கருணாகரன், ரமணிநீலமேகம், நிர்வாகிகள் போளூர் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் சி.சின்னக்குழந்தை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: