இராணிப்பேட்டை நகராட்சி வாரசந்தையில் தமிழக அரசின் சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      வேலூர்
ph vlr

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை நகராட்சி வாரசந்தையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சிறப்பு புகைப்பட கண்காட்சி சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. இக்கண்காட்சியை பொதுமக்கள் பார்த்து பயனடையும் விதமாக அமைந்துள்ளது. இக்கண்காட்சியில் மறைந்த மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய புகைப்படங்களும் மற்றும் அரசின் அனைத்துத் துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நலதிட்ட உதவிகள் அடங்கிய புகைப்படங்ளும், வேலூர் மாவட்டத்தில் மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் அரசு விழாவில் பங்குபெற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்களும் பொதுமக்கள் பார்த்து பயனடையும் வகையில் சிறப்பாக ஏற்பாடு செய்து அமைக்கப்பட்டது. இக்கண்காட்சியை வாரசந்தைக்கு வரும் இராணிப்பேட்டை நகராட்சி பகுதிகளை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் பார்க்கும் விதமாக மாலை 8.00 மணி வரை நடைபெறுகின்றது.தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மறைந்த மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் அரசின் திட்டங்கள் சாதனைகள் குறித்த நவீன மின்னணு வாகனத்தில் ஒளிப்பரப்பப்படும் மின்னணு திரைப்பட கண்காட்சியும் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.இளங்கோ, நகராட்சி பொறியாளர் ஆர்.எஸ்.வெங்கடாசலம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் செ.அசோக், என்.ஜி.நந்தகுமார் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

 

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: