அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்:

Alagappa

 காரைக்குடி:- அழகப்பாபல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையாஅவர்கள் தெரிவித்ததாவது:

 அழகப்பாபல்கலைக்கழக மேலாண்மையியல் வளாகத்தில் நேர்காணல் களைநடத்துவதற் கேற்ப நவீன வசதிகளுடன் கூடிய வேலைவாய்ப்பு அரங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் காணொளிகாட்சி உரையாடல் மூலம் நேர்காணல் நிகழ்த்துவதற்கான வசதிகளும், நேர்முதத் தேர்வினை நடத்தக்கூடிய மனிதவள அதிகாரிகளுக்கான தனி அறைகளும்,  இந்த அரங்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 அழகப்பாபல்கலைக்கழக வேலைவாய்ப்பு குழுமம் செப்டம்பர் 2016 முதல் பிப்ரவரி 2017 வரை ஆறு வேலைவாய்ப்பு நிகழ்வுகளை சிறப்பாக நடத்தியுள்ளது. தமிழகத்தின் புகழ்வாய்ந்த நிறுவனங்கள் பல்கலைக்கழக முதுநிலைத்துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் பயின்ற 160 மாணவர்களுக்கு பல்வேறு பணிகளுக்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழ கவேலைவாய்ப்பு குழுமத்தின் சார்பில் அழகப்பாபல்கலைக்கழக துறைகளில் முதுநிலை இறுதியாண்டு மற்றும் இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்கு ஃபிளாக் 2கே17 (குடுயுபு 2மு17 (குசைளவ டழழம @ யுளிசைiபெ புசயனரயவநள) – யு துழுடீ குஐநுளுவுயுஎன்னும் இரண்டுநாட்கள் வேலைவாய்ப்புமுகாம் 17.03.2017 மற்றும் 18.03.2017 ஆகிய இரண்டுநாட்கள் பல்கலைக்கழக மேலாண்மையியல் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்தநிகழ்ச்சியின் தொடக்கவிழாவில் அழகப்பாபல்கலைக்கழக வேலைவாய்ப்புக் குழுமத்தின் வேலைவாய்ப்புமலர் 2016-17 வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

 அழகப்பாபல்கலைக்கழக வேலைவாய்ப்புக் குழுமம் வேலைவாய்ப்புப் பாலத்திற்காக சென்னை, ஹெச் ஆர் டேலண்ட் என்டைட்டி என்னும் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது (ஆழரு றiவா நுஅpடழலயடிடைவைல டீசனைபநஇ ஊhநnயெi).
அழகப்பாபல்கலைக்கழக வேலைவாய்ப்புக் குழுமம், அழகப்பாபல்கலைக் கழகத்தின் பல்வேறு துறைகளில் 28 முதன்மைப் பாடங்களைப் பயிலும் 1544 இறுதியாண்டு மாணவர்களின் சுருக்கதன் விவரங்கள் அடங்கியமாணாக்கர் தரவுத்தளம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள் அழகப்பாபல்கலைக்கழக மாணவர்களின் தன் விவரங்களை எந்தநேரத்திலும் எளிதாக இணையத்தள ஆன்லைனிலும் பெற்றுவளாகநேர்காணல்களை நிகழ்த்த இயலும்.
இப்பொழுது நடத்தப்படவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் புகழ்மிக்க 12 நிறுவனங்கள் சுமார் 600-க்கும் மேற்பட்டபணி வாய்ப்புகளை வழங்கவுள்ளது. இதில் கலந்துகொள்ளும் நிறுவனங்கள், டி.வி.எஸ் ரூசன்ஸ், ஒமேகாஹெல்த் கேர்,விடெக்னாலாஜிஸ், ஜெபிநாகா, ஜஸ்ட் டயல்,விசாலம் சிட் பண்ட்ஸ், ஐ சோர்ஸ், இஎஸ்எ எப்,கோகிரின் ரூ கன்டஸ் ஆகியன அடங்கும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 1000-க்கும் மேற்பட்டபல்கலைக்கழக முதுநிலைத்துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிமாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர். இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவிகளுக்கு 18.03.2017 அன்றுநடைபெற உள்ளநிறைவு விழாவில் பணிநியமன ஆணைகள்  வழங்கப்பட இருக்கிறது.
மேலும், அழகப்பாபல்கலைக் கழககல்வியியல் கல்லூரி முதுநிலை மற்றும் இளநிலை கல்வியியல் பட்டமாணவர்களுக்கு 17.03.2017 அன்றுவளாக நேர்காணல் நடத்ததிட்டமிட்டுள்ளது இதில் குமுதா மெட்ரிகுலேசன் பள்ளிக்கான முதுநிலைஆசிரியர் பணிக்குமாணவர்கள் தோந்தெடுக்கப்படவுள்ளனர்.
அழகப்பாபல்கலைக்கழக மாணவமாணவிகள் நேர்முகத்தேர்வினைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில் மென்திறன்கள ;,உளவியல். பயிற்சிகள்,சுயவிவரக்குறிப்புகள் தயாரித்தல், குழுக் கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் திறன்கள் குறித்த பயிற்சிகள் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ