முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரினிடாட் - டொபாகோ பிரதமருக்கு கும்பமேளா புனிதநீரை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி

வெள்ளிக்கிழமை, 4 ஜூலை 2025      உலகம்
Modi 2024-01-17

Source: provided

போர்ட் ஆப் ஸ்பெயின் : டிரினிடாட்- டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ராமர் கோயிலின் மாதிரி நினைவுச் சின்னத்தையும் பரிசாக வழங்கினார்.

அரசுமுறை பயணமாக டிரினிடாட் - டொபாகோ நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடியை, பியார்கோ சர்வதேச விமான நிலையத்தில் அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசர் நடத்திய விருந்தில், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் மாதிரி நினைவுச் சின்னத்தையும், பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவிலிருந்து எடுத்துவந்த புனித நீரையும் நான் வழங்கினேன். இவை இந்தியாவிற்கும் டிரினிடாட் - டொபாகோவிற்கும் இடையிலான ஆழமான கலாச்சார மற்றும் ஆன்மிக பிணைப்புகளை அடையாளப்படுத்துகின்றன’ எனக் குறிப்பிட்டார்

இதனை தொடர்ந்து டிரினிடாட் & டொபாகோவில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசரை ‘பிஹாரின் மகள்’ என்று அழைத்தார், மேலும், கமலா பெர்சாத்தின் மூதாதையர்களுக்கு பிஹாருடன் உள்ள உறவுகளையும் அவர் நினைவு கூர்ந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து