முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்: பனையூர் கூட்டத்தில் 20 தீர்மானங்கள்

வெள்ளிக்கிழமை, 4 ஜூலை 2025      அரசியல்
Vijay-1-2025-07-04

சென்னை, 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய். த.வெ.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1,200 பேர் பங்கேற்றனர்.

மேலும் 120 மாவட்டங்கள், 12,500 கிராமப் புறங்களில் த.வெ.க.வின் கொள்கை விளக்கக் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விஜய்யின் தேர்தல் சுற்றுப் பயணத்திற்கு முன் மாநில மாநாட்டை நடத்த த.வெ.க. செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. பரந்தூர் மக்கள் உள்பட விவசாயிகளின் நலன் மற்றும் உரிமைக்காகத் தமிழக வெற்றிக் கழகம் என்றும் துணை நிற்கும்.

2. கொள்கை எதிரிகளுடனோ, பிளவுவாத சக்திகளுடனோ என்றும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை.

3. விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிரான அரசின் அதிகார மீறலைக் கண்டிக்கிறோம்! மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

4. நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

5. பெரும் நட்டத்தை சந்தித்துள்ள மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை தேவை.

6. மலைக்கோட்டை மாநகரில் நடக்கும் மணல் கொள்ளை தடுக்கப்பட வேண்டும்.

7. என்எல்சி-க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு முழுமையான இழப்பீட்டுத் தொகை, குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக்க வலியுறுத்தி தீர்மானம்.

8. விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கைகளை முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றக்கோரி தீர்மானம்.

9. திண்டுக்கல் மாவட்டத்தில் வாசனைத் திரவிய ஆலை தொடங்கக் கோரும் தீர்மானம்.

10. தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.

11.ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு.

12. அரசு மருத்துவர்களை நம்ப வைத்து ஏமாற்றாமல், கொடுத்த வாக்குறுதியின்படி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

13. தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிந்தரத் தீர்வு காண கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் ஒன்றிய அரசு கேட்டுப் பெற வேண்டும்.

14. இருமொழிக் கொள்கை தீர்மானம்.

15. தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) நடத்துவதன் வாயிலாக சிறுபான்மையினர் வாக்குகளை குறைக்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

16. கீழடியில் தமிழர் நாகரிகத்தை மூடி மறைக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்.

17. த.வெ.க.விற்கு எதிரான கபட நாடக தி.மு.க. அரசின் அராஜகப் போக்கிற்குக் கண்டனம்.

18. தொகுதி மறுசீராய்வு - ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம்.

19. காவல் துறை விசாரணையின் போது தொடர்ந்து பலர் கொல்லப்படுவதற்கும் அதனைத் தடுக்கத்தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத உள்துறை அமைச்சருக்கும் கண்டனம்.

 

20. பெரியார், அண்ணாவை அவமதிக்கும் பா.ஜ.க.வின் பிளவுவாத அரசியலைக் கண்டிக்கும் தீர்மானம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து