முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிப்படை ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பார்வியிட்டார்

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      கடலூர்
Image Unavailable

கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிப்படை ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சியை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் , கலெக்டர் டி.பி.ராஜேஷ், தலைமையில் மற்றும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிப்படை ஊராட்சியில் நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சியில் மறைந்த முதலமைச்சர் அம்மா தொடங்கி வைத்த அரசு திட்டங்கள் மற்றும் சாதனைகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி உள்ளிட்ட புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டன. பொதுமக்கள் ஆர்வத்துடன் இப்புகைப்படக் கண்காட்சியை கண்டுகளித்தனர்.இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.சத்தியசீலன், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமாறன், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலாளர் சங்கீதா துரை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்