Idhayam Matrimony

பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்து கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      விழுப்புரம்

விழுப்புரம் கலெக்டர்அலுவலகக் கூட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 2016-17ம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்து கலந்தாய்வு கூட்டம் கலெக்டர்இல.சுப்பிரமணியன்,  தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலெக்டர்இல.சுப்பிரமணியன்,  தெரிவித்ததாவது:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் குறிப்பிட்ட தேதியில் நடத்தப்பட வேண்டும்.  மேலும், மாணவ மாணவியர்கள் இப்போட்டிகளில் அதிக அளவில் பங்குபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இப்போட்டிகளில் பங்குபெறும் மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.  இப்போட்டிகளை சிறப்பாக நடத்திட, முதன்மைக் கல்வி அலுவலர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிட வேண்டும்.  இப்போட்டிகளில் முதல் இரண்டு இடங்களில் வெற்றிபெறும் மாணவ மாணவியர்களை மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கலெக்டர்இல.சுப்பிரமணியன்,  தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago