நாமக்கல் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 89 பயனாளிகளுக்கு ரூ.14.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்:கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      நாமக்கல்
2

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (27.03.2017) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை வேண்டியும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வேண்டியும், புதிய குடும்ப அட்;டைகள் வேண்டியும், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மொத்தம் 385 மனுக்கள் வரப்பெற்றன.இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 49 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.12,25,000 மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப்பட்டாக்களையும், வருவாய்த்துறையின் சார்பில் குமாரபாளையம் வட்டம், குமாரபாளையம் அமானி கிராமத்தில் வசித்த கௌதம் என்பவர் விபத்தில் மரணம் அடைந்ததை முன்னிட்டு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அவரது மனைவி அங்கம்மாள் என்பவருக்கு ரூ.1,02,500 மதிப்பிலான விபத்து நிவாரண நிதியுதவியினையும், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் சார்பில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களை விசைத்தறி தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்ட 4 நபர்களுக்கு விசைத்தறி தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளையும் கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார். அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார். மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்ட 3 மாற்றுத்திறனாளிக்கு தலா ரூ.30,000ஃ- வீதம் ரூ.90,000ஃ- மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகளையும், 3 மாற்றுத்திறனாளிக்கு தலா ரூ.1,500ஃ- வீதம் ரூ.4,500ஃ- மதிப்பிலான காதொலி கருவிகளையும், 29 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டைகளையும் என மொத்தம் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 89 பயனாளிகளுக்கு ரூ.14,22,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிசாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) நா.பாலச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்ரமணி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அசோகன்;, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் தனி வட்டாட்சியர் (நிலமெடுப்பு) மாதேஸ்வரி, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் அந்தோணி ஜெனிட் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்: