நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிக்கு ரூ.33.82 இலட்சம் மதிப்பீட்டில் 3 பெரிய குப்பை சேகரிக்கும் வாகனங்கள்: அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்றத்தொகுதி, பள்ளிபாளையம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை சேகரிக்கும் பெரிய வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (26.03.2017) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வக்குமார சின்னையன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்து திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் பள்ளிபாளையம் நகராட்சிக்கு ரூ.33.82 இலட்சம் மதிப்பீட்டில் 3 குப்பை சேகரிக்கும் பெரிய வாகனங்களையும், 37 குப்பை சேகரிக்கும் தள்ளுவண்டிகளையும் வழங்கினார்.பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தின் (Pஆசுலு) கீழ் பேரூராட்சிப் பகுதிகளில் வீடு இல்லாத குடும்பங்களுக்கு அரசு மானியத்துடன் புதிய குடியிருப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் இந்த ஆண்டு (2016-17) நாமக்கல் மாவட்டத்தில் 9 பேரூராட்சிகளில் பயனாளிகள் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, 583 பயனாளிகளுக்கு ரூ.18.36 இலட்சம் மதிப்பீட்டில் புதிய குடியிருப்புகள் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி அனைவருக்கும் வீடு கட்டித்தரும் திட்டத்தின் கீழ் தேர்வு பெற்ற பயனாளிகளுக்கு அதற்கான உத்தரவு ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செல்வி.சி.மாலதி, திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் இரா.கீர்த்தி பிரியதர்சினி, சேலம்-நாமக்கல் மாவட்ட ஆவின் ஒருங்கிணைந்த தலைவர் ஆர்.சின்னுசாமி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் டி.கே.சுப்பிரமணியம், டி.சி.எம்.எஸ்.தலைவர் பி.என்.கந்தசாமி, பள்ளிபாளையம் முன்னால் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் எஸ்.செந்தில், பள்ளிபாளையம் முன்னால் நகர்மன்றத்தலைவர் பி.எஸ்.வெள்ளியங்கிரி, அரசு வழக்கறிஞர் சந்திரசேகரர், பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் (பொ)சரவணன், பள்ளிபாளையம் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமகிருஷ்ண ராஜ், வி.கந்தசாமி உட்பட ஒன்றியப்பொறியாளர் உதவிப்பொறியாளர், அரசுத்துறை அலுவலர்கள் முன்னால் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், உட்பட ஏராளமான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: