முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரடிக்கல் கிராமத்தில் 278வது ஆண்டு ஜல்லிக்கட்டு விழா

புதன்கிழமை, 29 மார்ச் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-திருமங்கலம் அருகே கரடிக்கல் கிராமத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள 278வது ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவினை நடத்துவது தொடர்பாக காலரிகள் அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதனிடையே ஜல்லிக்கட்டில் பங்கேற்கவுள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான பதிவு இன்று முதல் துவங்குகிறது.

மதுரை மாவட்டம்,திருமங்கலம் தாலுகாவில் உள்ள கரடிக்கல் கிராமத்திலுள்ள ஸ்ரீசுந்தரராஜபெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 2-ம் தேதி 278-வது ஆண்டு உலகப்புகழ் பெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு விழா நடைபெறவுள்ளது.இதற்காக தற்போது கரடிக்கல் கிராமத்தில் சிறப்பாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை கரடிக்கல் நான்கு பங்காளிகள் மற்றும் கிராமப் பொதுமக்கள் கோலாகலமாக செய்து வருகின்றனர்.இதற்காக கரடிக்கல் கிராமத்திலுள்ள மைதானத்தில் காளைகளை நிழலில் வரிசையாக நிறுத்தி வைத்திருக்கும் இடம்,தென்னை மரத்தினால் ஆன பலம்மிகுந்த வாடிவாசல்,மாவட்ட நிர்வாகம்,முக்கிய பிரமுகர்கள்,பொதுமக்கள்,பார்வையாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு என்று தனித்தனி காலரிகள்,வலையுடன் கூடிய இரட்டை வேலி பாதுகாப்பு,குடிநீர்வசதி,காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள்  அனைத்தும் மின்னல் வேகத்தில் தற்போது செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயம் இந்த ஜல்லிக்கட்டு விழாவில் 700க்கும் மேற்பட்ட காளைகளும் அவற்றை அடக்கிட 500க்கும் மேற்பட்ட காளையர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளுக்கும், காளைகளை அடக்கி வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும் கிடைமாட்டு காளங்கன்றுகள், தங்கநாணயம்,பீரோ,கட்டில்,அண்டா,பானை,சைக்கிள்,குக்கர்,அயன்பாக்ஸ்,மின்விசிறி,மிக்சி,கிரைண்டர்,பிரிட்ஜ்,தேக்குமர பர்னிச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.மேலும் ஜல்லிக்கட்டு விழாவிற்கு முதல்நாள்(1ம்தேதி) இரவு 10மணிக்கு கோவில் முன்பாக அமைந்துள்ள கலையரங்கத்தில் கரடிக்கல் கிராம கமிட்டியார்கள் மற்றும் கிராமப் பொதுமக்கள் சார்பில் பாரம்பரியமிக்க ஸ்ரீவள்ளிதிருமணம் நாடகம் நடைபெற உள்ளது.ஜல்லிக்கட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு இருப்பினும் பூர்வீகமான ஐதீகத்தின்படி கரடிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கரடிக்கல் கிராமம் அருள்மிகு ஸ்ரீசுந்தரராஜபெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 2ம்தேதி 278வது ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவை நடத்துவதற்காக தீவிரமாக நடைபெற்று வரும் பணிகளை கரடிக்கல் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி நிர்வாகிகள் ஆண்டிச்சாமி,மொக்கராஜ்,ஆண்டிச்சாமி,மணிமுத்து ஆகியோரும் கிராமமக்களும் நேற்று காலை நேரில் பார்வையிட்டனர்.மேலும் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் காளைகளை அடக்கிடும் மாடுபிடி வீரர்களுக்கான பதிவு இன்று முதல் தொடங்கி 1ம் தேதி வரை நடைபெறுவதாகவும்,மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி ஜல்லிக்கட்டு விழாவிற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் மற்றும் வசதிகள் செய்யப்பட இருப்பதாகவும் விழாகமிட்டி நிர்வாகிகள் தெரிவித்தனர்.பல்வேறு தடைகளை தாண்டி 12ஆண்டுகளுக்கு பிறகு கரடிக்கல் கிராமத்தில் வரும் 2ம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதை முன்னிட்டு கிராமம் முழுவதும் தோரணங்கள்,பேனர்கள்,வரவேற்பு பதாகைகள் என விழாக்கோலம் பூண்டிருப்பதுடன் கிராமமக்கள் மகிழச்சியில் திளைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago