முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையினை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.

திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்  தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 10 உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் வழங்கினார்.

தமிழ்நாட்டில் வசிக்கும்  நரிக்குறவர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் திட்டமிட்ட, உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்காக, தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியம் அமைக்கப்பட்டு, இயங்கி வருகிறது. தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தில், பதிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு, பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின்கீழ், நரிக்குறவர் வகுப்பைச் சேர்ந்த, அமைப்புசாரா தொழில் மற்றும் நிலமற்ற விவசாயக்கூலி போன்ற உடல் உழைப்புத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பயன்பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். 18 வயதை நிறைவு செய்து 60 வயதுக்கு உட்பட்ட நரிக்குறவர் வகுப்பைச் சேர்ந்தவர்கள், இதர நல வாரியங்களில் உறுப்பினராகச் சேராதநிலையில், தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவுபெறத் தகுதியுடையவர்கள்ஆவர்.

  இவ்வாரியத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளான விபத்தினால் ஏற்படும் மரணம் மற்றும் ஊனத்திற்கான உதவித் தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை, 1ஆம் வகுப்பு முதல் பட்டமேற்படிப்பு வரை பயிலும் பதிவு பெற்ற உறுப்பினரின் மகன் மற்றும் மகளுக்குக் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, பதிவு பெற்ற உறுப்பினருக்கு மகப்பேறு உதவித்தொகை, மூக்குக்கண்ணாடி உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

                இந்நிகழ்வின்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் என்.ராமச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்