முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஊட்டியில் வரும் 9-ந் தேதி நடைபெறுகிறது

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      நீலகிரி

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஊட்டியில் வரும் 9_ந் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-

                                       01.04.2017 அன்று வெளியீடு

31.05.2015 அன்று நடைபெற்ற ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்விற்கான தேர்வு முடிவுகள் 24.03.2017 அன்று தேர்வுத்துறை இயக்ககத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மாவட்டத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்கேற்ப 15 விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு கடந்த 01.04.2017 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் நடைமுறையில் உள்ள இனசுழற்சி மற்றும் விண்ணப்பதாரர்கள் அளித்திருந்த விவரங்கள் அடிப்படையிலும் மிகுந்த கவனத்துடன் தயார் செய்யப்பட்டுள்ளது.

இப்பட்டியல் தற்பொழுது நடைமுறையில் உள்ள வெரிடிகல், ஹோரிஸோண்டல் ரிசர்வேசன் முறையில் மகளிர், ஆதரவற்ற விதவை, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு, 20 சதவீதம் தமிழ்வழியில் பயின்றோருக்கான இட ஒதுக்கீடு மற்றும் முன்னுரிமை பெற்றவருக்கும், முன்னுரிமையற்றோருக்கும் இடையேயான 14 என்ற விகிதாச்சாரம் ஆகியவற்றை இனச்சுழற்சி முறையுடன் கடைபிடித்து தயார் செய்யப்பட்டுள்ளது. இப்பட்டியில் கடந்த 1_ந் தேதியன்றே முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் இணையதளத்திலும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

                            ஊட்டியில் 9_ந் தேதி

சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வரும் 9_ந் தேதியன்று ஊட்டி புனித சூசையப்பர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நெறிமுறைகளின்படி சான்றிதழ் சரிபார்ப்பின் போது வெயிடேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன்படி எழுத்துத்தேர்வு 150 மதிப்பெண்கள், சான்றிதழ் அடிப்படையிலான மதிப்பீடு 10 மதிப்பெண்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுக்கு இரண்டு ஆண்டுகள் வரை 2 மதிப்பெண்கள், 4 ஆண்டுகள் வரை 4 மதிப்பெண்கள், 6 ஆண்டுகள் வரை 6 மதிப்பெண்கள், 8 ஆண்டுகள் வரை 8 மதிப்பெண்கள், 10 ஆண்டுகள் அதற்கு மேலும் 10 மதிப்பெண்கள், கூடுதல் கல்வித்தகுதி 5 மதிப்பெண்கள், முன் அனுபவம் 2 மதிப்பெண்கள் என மொத்தம் 167 மதிப்பெண்கள்.

                          மொத்த மதிப்பெண்கள்

இப்பதவிக்கான தேர்விற்கு விண்ணப்பிக்கும் இறுதி நாளான 06.05.2015 வரையிலான தகுதியுள்ள வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை, உயர்கல்வித்தகுதி, ஆய்வக உதவியாளர் பணியில் பணி அனுபவம் ஆகியவை மட்டுமே கருத்திற்கொள்ளப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று சமர்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு நாளிற்குப் பிறகு சமர்பிக்கப்படும் ஆவணங்கள் கருத்திற்கொள்ளப்பட மாட்டாது. ஆய்வக உதவியாளர் பணியில் பணி அனுபவத்தைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிந்த 06.05.2015 வரையிலான பணிக்காலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

                                 சான்றிதழ் சரிபார்ப்பு

சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின் தகுதிபெற்ற பணிநாடுநர்களைக் கொண்டு  பெற்ற எழுத்துத்தேர்வு மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் போது வழங்கப்பட்ட மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்தமதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயார் செய்யப்படும். அத்தகுதிப் பட்டியலின் அடிப்படையில் நடைமுறையில் உள்ள இனசுழற்சி மற்றும் இதர உள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் காலிப்பணியிடங்களுக்கு தகுதியான பணிநாடுநர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். தெரிவு செய்யப்பட்ட பணி நாடுநர்களுக்கு உரிய பணி நியமன ஆணை வெளிப்படையான கலந்தாய்வின் மூலம் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலர்களால் வழங்கப்படும். இத்தகவலை மாவட்டமுதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்