ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து: தலைவர்கள் கடும் கண்டனம்

திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017      அரசியல்
madhusudhanan(N)

சென்னை - ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலை திடீர் என்று ரத்து செய்ததற்கு கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனர். தேர்தலை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை என்றும் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதி் இடைத்தேர்தல் நேற்று முன் தீனம் நள்ளிரவு திடீர் என ரத்து செய்யப்பட்டது. இன்னும் 1 நாளில் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் இந்த அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆ.ர்.கே. நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் ரத்து செய்யப்பட்டது திட்டமிட்ட நாடகம் என்று அ தி.மு.க. (அம்மா) வேட்பாளர் டிடிவி. தினகரன் குற்றஞ்சாட்டினார்.

இ.மதுசூதனன்
அ தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் இ.மதுசூதனன் கூறுகையில், “ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றார்.

தமிழசை சவுந்தரராஜன்
கடைசி நேரத்தில் இவ்வளவு கெடுபிடிகள் செய்து தேர்தலை ரத்து செய்துள்ளார்கள். இதனால் மனித உழைப்பு, நேரம் அனைத்தும் வீணாகிவிட்டது என்று பாரதீய ஜனதா தலைவர் தமிழசை சவுந்தரராஜன் கூறினார்.

இரா.முத்தரசன்
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறுகையில், தமிழகத்தில் பாரதீய ஜனதா அரசு காலூன்றவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.

திருமாவளவன்
விடுதலை சிறுதைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில்,ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து என குறுகியகாலத்தில் வெளியிட்டது அதிர்ச்சி அளிக்கிறது. வேட்பாளர் செலவு செய்யும் தொகையை முன் கூட்டியே தேர்தல் ஆணையத்திற்கு கூற வேண்டும். செலவுக்கான ரசீதினை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும். இது போன்ற அடிப்படையிலான மாற்றங்களை கொண்டு வரவேண்டும்.

காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்
இந்த தேர்தலில் பாரதீய ஜனதா தலையீடு உள்ளது என்பதையும் புறம் தள்ள முடியாது. இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்குவதற்கு முன்பே பாரதீய ஜனதா தலைவர்கள் இரட்டை இலை முடக்கப்படும் என்று அறிவித்தார்கள். அது எப்படி இவர்களுக்கு முன்பே தெரியும் என்று கூறினார். தேர்தல் ரத்து என்பது நேர்மையாக உழைத்தவர்களுக்கு தண்டனை கொடுத்தது போல் உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார். இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் உள்ளதாக அ தி.மு.க. (அம்மா) தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்: