முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோர்டான் முதலீட்டாளர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2025      உலகம்
Modi-2025-12-16

அம்மான், ஜோர்டான் முதலீட்டாளர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

 ஜோர்டானில் உள்ள ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் இந்தியாவில் புதிய வாய்ப்புகளின் கதவுகள் திறக்கப்படுகின்றன. இந்தியாவில் முதலீடு செய்வதன் மூலம் அதன் விரைவான வளர்ச்சியில் நீங்கள் ஒரு பங்காளியாக மாறுவதோடு, உங்கள் முதலீடுகளுக்கு சிறந்த வருமானத்தையும் பெறலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜோர்டான் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் மன்னர் அப்துல்லா-II முன்னிலையில் நடைபெற்ற இந்தியா - ஜோர்டான் முதலீட்டாளர் சந்திப்பில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: மன்னருடனான எனது உரையாடலின்போது புவியியலை வாய்ப்பாகவும், வாய்ப்பை வளர்ச்சியாகவும் மாற்றுவது எப்படி என்பது குறித்து விரிவாக விவாதித்தோம். மன்னரின் தலைமையின் கீழ் ஜோர்டான், பல்வேறு பிராந்தியங்களுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை அதிகரிக்க பெரிதும் உதவும் ஒரு பாலமாக மாறியுள்ளது.

ஜோர்டான் மூலம் இந்திய நிறுவனங்கள் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பிற நாடுகளின் சந்தைகளை எவ்வாறு அணுக முடியும் என்பதை மன்னர்  விவரித்தார். இங்கு வருகை தந்துள்ள இந்திய நிறுவனங்கள் இந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தியா, ஜோர்டானின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளி. வணிக உலகில் எண்கள் முக்கியம் என்பதை நான் அறிவேன். ஆனால், எண்களை எண்ணுவதற்கு மட்டும் நாங்கள் இங்கு வரவில்லை. நீண்டகால அடிப்படையில் உறவுகளை உருவாக்க நாங்கள் இங்கு வந்துள்ளோம்.

புவியியல் ஜோர்டானின் பலம். இந்தியா திறமை மற்றும் அளவை கொண்டுள்ளது. இந்த பலங்கள் ஒன்றிணைந்தால் அது இரு நாடுகளின் இளைஞர்களுக்கும் புதிய வாய்ப்புகளை வழங்கும். நாம் ஒன்றாக முதலீடு செய்வோம்; ஒன்றாக புதுமை செய்வோம்; ஒன்றாக வளருவோம். இவ்வாறு பிரதமர் உரையாற்றினார்.

5 ஒப்பந்தங்கள் கையெழுத்து

 

1. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். 2. நீர்வள மேலாண்மை மற்றும் மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். 3. பெட்ரா மற்றும் எல்லோரா இடையே இரட்டை நகர ஒப்பந்தம். 4. 2025-2029 ஆண்டுகளுக்கான கலாச்சார பரிமாற்றத் திட்டத்தை புதுப்பித்தல், 5. டிஜிட்டல் மாற்றத்துக்காக வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒத்துழைப்பு. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து