எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. மேலும், இது தொடர்பாக மேலதிக விசாரணையைத் தொடருமாறும் அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, அத்துடன் மறைந்த கட்சித் தலைவர்களான மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா மற்றும் யங் இந்தியன் தனியார் நிறுவனம் ஆகியோர் மீது சதி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளை அமலாக்கத் துறை சுமத்தியுள்ளது.
குற்றப்பத்திரிகையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிட்ரோடா, துபே, சுனில் பண்டாரி, யங் இந்தியன் மற்றும் டோட்டெக்ஸ் மெர்ச்சன்டைஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நேஷனல் ஹெரால்டு செய்தித்தாள்களை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை இவர்கள் சட்டவிரோதமாகக் கைப்பற்றியதாக விசாரணை நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது.
ரூ.90 கோடி கடனுக்கு ஈடாக, அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சொத்துக்களை மோசடியாக அபகரித்த யங் இந்தியன் நிறுவனத்தில் சோனியா காந்தி குடும்பத்தினர் 76 சதவீதம் பெரும்பான்மை பங்குகளை வைத்திருந்ததாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


