முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாத்மா காந்தி மீதான வெறுப்பால் 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கிறார் பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2025      இந்தியா
Rahul 2024-09-09

டெல்லி, மகாத்மா காந்தி மீதான வெறுப்பால் 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கிறார் பிரதமர் மோடி என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பெயர்மாற்றம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:- 

மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்யம் என்ற தொலைநோக்குப் பார்வையின் வாழும் வடிவமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் திகழ்கிறது. இது கோடிக்கணக்கான கிராமப்புற இந்தியர்களுக்கு ஒரு உயிர்நாடியாக இருந்து வருகிறது, மேலும் கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஒரு முக்கியமான பொருளாதாரப் பாதுகாப்பு வலையாகவும் இருந்தது. 

இருப்பினும், இந்தத் திட்டம் பிரதமர் மோடிக்கு எப்போதும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக, அவரது அரசு இதைத் திட்டமிட்டு பலவீனப்படுத்த முயன்று வருகிறது. இப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறது.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மூன்று அடிப்படைக் கொள்கைகளை கொண்டு உருவாக்கப்பட்டது:

வேலைவாய்ப்பு உரிமை - வேலை கோரும் எவருக்கும் வேலை வழங்கப்பட வேண்டும். கிராமங்கள், தங்களின் சொந்த வளர்ச்சிப் பணிகளைத் தாங்களே தீர்மானிப்பதற்கான சுயாட்சி. முழு ஊதிய ஆதரவு மற்றும் மூலப்பொருட்களுக்கான செலவில் 75 சதவீதம் மத்திய அரசால் வழங்கப்படும். இப்போது இதனை மத்திய அரசின் கட்டுப்பாட்டு கருவியாக மாற்ற முயற்சிக்கிறார். 

பட்ஜெட், திட்டங்கள் மற்றும் விதிகள் மத்திய அரசால் தீர்மானிக்கப்படும். செலவுகளில் 40 சதவீதத்தை மாநிலங்கள் ஏற்கும்படி கட்டாயப்படுத்தப்படும். நிதி இல்லாவிட்டால் அல்லது அறுவடை காலங்களில், தொழிலாளர்களுக்கு மாதக்கணக்கில் வேலை மறுக்கப்படும். இந்த புதிய மசோதா மகாத்மா காந்தியின் கொள்கைகளை நேரடியாக அவமதிப்பதாகும். வேலையின்மையால் இளைஞர்களின் வாழ்க்கையை அழித்ததோடு மட்டுமில்லாமல், தற்போது ஏழை கிராமப்புறக் குடும்பங்களின் பாதுகாப்பான வாழ்வாதாரத்தை குறிவைக்கிறது. தெரு முதல் நாடாளுமன்றம் வரை பாஜக அரசின் மக்கள்விரோத மசோதாவை எதிர்ப்போம்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து