எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட 58 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர், விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஜன.15 வரை திருத்தங்களைக் கோர அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் விவரங்களை சரிபார்த்து பதிவு செய்வதற்கான பணிகள் முடிந்துள்ள நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட உள்ளது. அதற்கு முன்பாக, நீக்கப்பட்ட பெயர்கள் குறித்த விவரங்கள் ceowestbengal.wb.gov.in/asd_sir என்ற இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது.
அதில், 58 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் இல்லாதது, நிரந்தரமாக இடம் மாறியது, இறந்துவிட்டது அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளராக பதிவு செய்தது போன்ற காரணங்களால் இந்த பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் நேற்று (டிச. 16, 2025) முதல் அடுத்த மாதம் 15 வரை (ஜன. 15, 2026) படிவம் 6 உடன் உறுதிமொழிப்படிவம் மற்றும் துணை ஆவணங்களை இணைத்து தங்கள் பெயர்களை சேர்க்கக் கோரலாம் என தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


