முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேத்தி சி.எஸ்.ஐபொறியியல் கல்லூரியில் 94 % மாணவர்கள் பிளேஸ்மெண்ட் கல்லூரி முதல்வர் ஜான் ஓரல் பாஸ்கர் தகவல்

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      நீலகிரி

 

கேத்தி சி.எஸ்.ஐபொறியியல் கல்லூரியில் 94 % மாணவர்கள் பிளேஸ்மெண்ட் பெற்றுள்ளனர் என கல்லூரி முதல்வர் டாக்டர் ஜான் ஓரல் பாஸ்கர் தெரிவித்தார்.

சதவீதம் பிளேஸ்மென்ட்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள கேத்தியில் செயல்பட்டு சி.எஸ்.ஐபொறியியல் கல்லூரியில் பி.இ கம்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், மெக்கானிக்கல் என்ஜினியரிங், சிவில் ன்ஜினிரியங், எம்.இ கம்ப்யூட்டர் சயின்ஸ், பவர் எலக்ட்ரானிக்ஸ், ஸ்டர்கஸ்வரல் இன்ஜினியரிங் உள்ளிட்ட பாடப்பிரிவுகளின் கீழ் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இக்கல்லூரியின் முதல்வராக கடந்த ஓராண்டுக்கும் மேலாக டாக்டர் ஜான் ஓரல் பாஸ்கர் பணியாற்றி வருகிறார். இவர் தல்வராக பொறுப்பேற்றது முதல் இக்கல்லூரியை முதன்மை கல்லூரியாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அந்த முதல்கட்டமாக க்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் 2016_2017ம் கல்வி ஆண்டில் 94 சதவீதம் பேருக்கு (பிளேஸ்மெண்ட்)வேலை கிடைத்துள்ளது. இது கல்லூரி வரலாற்றில் முதன் முறையாகும். இது குறித்து கல்லூரி முதல்வர் டாக்டர் ஜான் ஓரல் பாஸ்கர் கூறியதாவது_

முதன் முறை

கேத்தி சி.எஸ்.ஐபொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மூலம் பல்வேறு சமூக பணிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்தாண்டு(2016_2017 கல்வியாண்டில் எங்கள் கல்லூரியில் பி.இ மற்றும் எம்.இ படிப்புகளில் பயின்ற மாணவர்களில் 318 பேரில் 297 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்இதில் ஒரு கம்பெனியில் வேலை பெற்றவர்கள் 147 பேரும், இரண்டு கம்பெனியில் 68 பேரும், 3 கம்பெனிகளில் 43 பேரும், 4 கம்பெனிகளில் 16 பேரும், 5 கம்பெனிகளில் 23 பேரும் அடங்குவர். இது இக்கல்லூரி வரலாற்றின் முதன் முறையாகும். மேலும் 2017_2018ம் கல்வியாண்டில் இக்கல்லூரியில் பயில்வதற்கு தற்போது 75 சதவீதம் இடங்கள் பூர்த்தியாகியுள்ளது. இக்கல்லூரியை முதன்மை கல்லூரியாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் ஆண்டுகளில் இக்கல்லூரியில் படிப்பதற்கு மாணவர்களிடையே போட்டி ஏற்படும் அளவிற்கு கேத்தி சி.எஸ்.ஐ கல்லூரி மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றார். அப்போது கல்லூரியின் நிர்வாக அலுவலர் உதயகுமார், பிளேஸ்மெண்ட் அலுவலர் பேராசிரியர் சாம் செல்லதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்