முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் கிராமத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மூலம் நடைபெற்ற 100 சதவீதம் மின்னனு பணப் பரிவர்த்தனை திட்டம் கலெக்டர் ச. ஜெயந்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 2 மே 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டத்திற்குட்பட்ட பெத்தநாயக்கன்பாளையம் கிராமத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மூலம் நடைபெற்ற 100 சதவீதம் மின்னனு பணப்பரிவர்த்தனை திட்டத்தினை   மாவட்ட கலெக்டர் ச. ஜெயந்தி   குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள். இக் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர்  தெரிவித்ததாவது  

100 சதவித மின்னனு பணப் பரிவர்த்தனை

நாடு முழுவதும் மின்னனு பணப்பரிவர்த்தனை திட்டத்தினை  பாரத பிரதமர் அவர்களால்  தொடங்கி வைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்  ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 100 சதவிகித மின்னனு பணப் பரிவர்த்தணைக்காக பெத்தநாயக்கன்பாளையம் கிராமத்தை தத்தெடுத்துள்ளது. இவ்வங்கி  மூலமாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு  கடனுதவி வழங்கப்பட்டுள்ளது மற்றும்  தொழில் திறன் வளர்ச்சிதிட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பயிற்சிகளையும் வழங்கப்பட்டுள்ளதென மாவட்ட கலெக்டர்  தெரிவித்தார்கள். 

இதனைத்தொடர்ந்து, தொழில் திறன் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர்  சான்றிதழ்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளையும் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் முன்னோடி வங்கி மேலாளர் சுந்தரமூர்த்தி, நபார்டு வங்கி உதவி மேலாளர் ஸ்ரீராம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்