உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ள பெரிய குளத்தினை தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது

ஞாயிற்றுக்கிழமை, 7 மே 2017      திருப்பூர்
aa

திருப்பூர் மாவட்டம்,  உடுமலைப்பேட்டை வட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய குளத்தினை  தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

8 குளங்களில் உள்ள வண்டல் மண் தூர் பாகி சீரமைக்க

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், பொதுப் பணித்துறை/ நீர்வளத்ஆதாரத்துறை திருமூர்த்தி கோட்டத்தின் இயக்கம் மற்றும் பராமரிப்பில் தினைக்குளம், செட்டிக்குளம், செங்குளம், கரிசல்குளம், அம்மா பட்டி குளம், ஒட்டுக்குளம், வளையபாளையம் குளம் மற்றும் பெரிய குளம் ஆகிய குளங்களில்  உள்ள வண்டல் மண்ணை அப்பகுதி விவசாய பெருமக்கள் தங்களுடைய விவசாய நிலங்களுக்கு உபயோகப்படுத்திக் கொள்ள அனுமதி வழங்குமாறு தமிழக அரசுக்கும் மாவட்ட கலெக்டர் அவர்களுக்கும் கோரிக்கை விண்ணப்பங்களை அளித்திருந்தனர். விவசாய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று மாவட்ட கலெக்டர்   மேற் குறிப்பிட்ட 8 குளங்களில் உள்ள வண்டல் மண் படிவங்களை தூர் வாரி சீரமைக்க திருப்பூர் மாவட்ட அரசிதழ் எண் 2 நாள் 15.02.2017-ல் வெளியிடப்பட்டன. மேலும் அரசாணை எண் (எம்.எஸ்.) 50 தொழில்கள் (எம்.எம்.சி.) துறை நாள் 27.04.2017-ன்படி விவசாயிகள் தங்களது சொந்த நிலங்களுக்கு வண்டல் மண் எடுத்துக் கொள்வதற்காக நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள அரசாணையின்படி 8 குளங்களில் பெரிய குளத்தின் பாசனதாரர்கள் பெரியகுளத்திலிருந்து வண்டல் மண் எடுப்பதற்காக செயற்பொறியாளர், பொ.ப.து./ஆ.து, திருமூர்த்திக்கோட்டம் உடுமலைப்பேட்டை  அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் கூர்ந்து ஆய்வு செய்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அவர்களுக்கு பரிந்துரை செய்து மாவட்ட கலெக்டர் அவர்களிடமிருந்து அனுமதி பெற்று மேற்படி குளத்தின் பாசன விவசாயிகளுக்கு அரசாணையின்படி செயற்பொறியாளர், பொ.ப.து./ஆ.து, திருமூர்த்திக்கோட்டம் உடுமலைப்பேட்டை மூலம் அனுமதி வழங்கப்பட்டது.

இதனை யொட்டி, மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி  அவர்களின் அனுமதியின் பேரில் செயற்பொறியாளர், பொ.ப.து./ஆ.து, திருமூர்த்திக்கோட்டம் உடுமலைப்பேட்டை,  பெரியகுளத்தின் நீர்பரப்பு பகுதியில் இருந்து வண்டல் மண் எடுத்துச் செல்வதற்கு உரிய கட்டணத் தொகை வரைவோலையாக பாசன விவசாயிகளால் பெறப்பட்டு வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.  இதனைதொடர்ந்து பெரியகுளத்தின் நீர் பரப்பு பகுதிகளில் இருந்து விவசாய பெருமக்கள் வண்டல் மண் எடுக்கும் பணி  தொடங்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது, செயற்பொறியாளர், பொ.ப.து./ஆ.து, திருமூர்த்திக்கோட்டம் உடுமலைப்பேட்டை வி.ராசு,   உதவி செயற்பொறியாளர் தன்ராஜ், இளம் பொறியாளர் சரவணன், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: