மானாவாரிப் பருவம் தொடங்குவதால் ஊட்டமேற்றிய உரம் தயாரிக்க வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 9 மே 2017      வேளாண் பூமி
Agri

Source: provided

மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடிக்காக ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பது குறித்து நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளதாவது.

இந்தியாவின் மொத்தப் பரப்பபில் 75 சதம் மானாவாரி நிலமாகும். தமிழகத்தில் மொத்த சாகுபடிப் பரப்பில் சுமார் 50 சதம் வானம் பார்த்த பூமியாகும். மானாவாரியாக பயிரிடப்படும் நிலங்களில் குறைந்த மகசூலே கிடைக்கிறது. இதற்குக் காரணம் பருவம் தவறிய மழை, மழை அளவில் நிலையில்லாத தன்மை, குறைந்த கால மழைப்பருவம், அதிக அளவில் நீர் ஆவியாதல், மண் அரிப்பு - போன்றவையாகும்.

எனவே, நிலையில்லாத சூழ்நிலையில் மானாவாரி விவசாயத்தில் சில உத்திகளைப் பயன்படுத்தி ஓரளவு நிலைத்த வருமானத்தைப் பெறலாம். இதில் முக்கியமானது ஊட்டமேற்றிய தொழு உரமாகும். மண் வளப் பராமரிப்பு வேளாண்பயிர்களின்  விளைச்சலில் மிக முக்கிய பங்கு வகுக்கிறது. . மண்ணில் உள்ள சத்துக்களில் மணிச்சத்தானது பயிர்களுக்கு  அதிக அளவில் தேவைப்படும் சத்தாகும். குறிப்பாக பயிர்கள் வேரூன்றி செழித்து வளர மணிச்சத்தானது மிக அவசியமாகிறது. மண்ணில் காணப்படும். தழைச்சத்தும் பயிருக்கு உடனே கிடைக்கும் நிலையில் இருப்பதில்லை. இந்த ஊட்டச்சத்துக்களை ஊட்டமேற்றிய தொழுஉரம் மூலமாக இடுவதன் மூலம் பயிருக்கு உடனே கிடைக்கும் நிலைக்கு மாற்றலாம்.

உரமிட்டால் மகசூல் கூடும்

மானாவாரி சாகுபடி வயல்களில் உரமிட்ட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கிறது என ஆராய்ச்சி முடிவுகள் மூலம் தெரியவருகிறது. தமிழகத்தில் மானாவாரி சாகுபடிப் பரப்பில்10 சதம் மட்டுமே போதிய உரமிடப்படுகிறது. நம்பியூர் வட்டாரத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் மானாவாரிப் பகுதியாக உள்ளது. இதில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக ஆண்டுதோறும் மானாவாரி நிலக்கடலை பயிராகிறது. நிச்சயமற்ற மழை மற்றும் வறட்சி காரணமாக மானாவாரி நிலக்கடலைக்கு உரமிட விவசாயிகள் தயங்குகின்றனர். மேலும், போதிய தொழுஉரம் கிடைக்காததாலும் அதன் விலை அதிகமாக இருப்பதாலும் இயற்கை உரத்தின் பயன்பாடும் குறைந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் பயிருக்கு உரமிடுவதில் புதிய உத்தியைக் கையாள்வது அவசியமாகிறது.

அதிகம் செலவு பிடிக்காத, மிகவும் எளிமையான இந்த ஊட்டமேற்றிய தொழு உரம் இடும் முறையை கையாள்வதன் மூலம் மானாவாரியிலும் மகத்தான மகசூலைப் பெறலாம்.

தயாரிப்பது எப்படி?

ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பது மிகவும் எளிமையானதாகும். மானாவாரி நிலக்கடலை விதைப்பதற்கு குறைந்தது  ஒரு மாதம் முன்பே இதைத் தயாரித்து வைக்க வேண்டும். ஒரு வண்டி (சுமார் 300 கிலோ) நன்கு மட்கிய தொழு உரத்துடன்  (சாணிக்குப்பை) ஒரு ஏக்கருக்கு பரிந்துரை செய்யப்படும் உரங்களான 25 கிலோ சூப்பர் பாஸ்பேட், 30 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்களை நன்கு கலந்து மூட்டமாகக் குவித்து வைத்து நிழலில் களி மண் மூலம் நன்கு மூடி வைக்க வேண்டும். அல்லது நன்கு தண்ணீர் தெளித்து கெட்டியாக குவியலை தட்டிவிட வேண்டும். காற்றுப் புகாத நிலையில் உரச்சத்துகள் வீணாகாமல் தடுக்கப்படும். அதை அப்படியே ஒரு மாதகாலம் விட்டு வைக்கும் போது,  தொழு உரம் ஊட்டம் பெற்று கூடுதல் சத்துக்களைப் பெறுகின்றன. ஒரு மாதம் கழித்து இத்துடன் 9 கிலோ யூரியாவைக் கலந்து  ஒரு ஏக்கரில் விதைப்பருப்பு சால் விடும் போது அந்தப் படைக்காலிலேயே தூவிவிட வேண்டும். அதாவது முழுவதும் அடியுரமாகவே இட வேண்டும்.

இதன் மூலம், மானாவாரி நிலக்கடலைக்கு இடவேண்டிய உரச்சத்துகள் இழப்பின்றிப் பயிருக்கு உடனே  கிடைக்கின்றன. பயிர்களின் வேர்வளர்ச்சி அதிகமாகி மகசூல் கூடுகிறது. மணிச்சத்து வீணாகாமல் பயிருக்குக் கிடைக்கிறது. மண்ணின் இயற்பியல் தன்மை மேம்படுகிறது. மண்ணில் நீர் தேங்கும் திறன் அதிகரிக்கிறது. மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மற்ற சத்துக்களும் பயிருக்குக் கிடைத்து, விளைச்சல் அதிகரிக்கிறது. மேலும், வறட்சியின் போது இரசாயன உரமிடுவதால் ஏற்படும் அபாயமும் குறைகிறது. அதுமட்டுமின்றி ஒரளவு தொழு உரமும் பயிருக்கு இடும் வாய்ப்புக் கிட்டுகிறது. ஒரு ஏக்கருக்கு ஒரு வண்டிக்கும் கூடுதலாகத் தொழு இட்டால், இன்னும் மகசூல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

மேலும், ஒரு ஏக்கருக்கு குறைந்தது இரண்டு பொட்டலம் (400 கிராம்) ‘ரைசோபியம்”, இரண்டு பொட்டலம் ‘பாஸ்போபேக்டீரியா” ஆகிய உயிர் உரங்களை நிலக்கடலை விதையுடன் ஆறியகஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைப்பதால் கூடுதல் மகசூல்  பெறலாம். விதை விதைக்கும் போது மேற்கூறப்பட்ட உயிர் உரங்களைத் தனியாக சிறிது தொழு உரத்துடன் கலந்து வயலில் இட்டு அதிக மகசூல் பெறலாம். பெருகிவரும் உரத்தட்டுப்பாடு, இடுபொருள்களின் விலை உயர்வு போன்ற இடர்பாடுகளுக்கு மத்தியில் இதற்கு மாற்றாக நல்ல தரமான ஊட்டமேற்றிய தொழுஉரத்தை விவசாயிகள் உற்பத்தி செய்து பயன்படுத்தி  நல்ல மகசூல் பெறலாம்.

இவ்வாறு நம்பியூர், வேளாண்மை உதவி இயக்குநர், அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.

Viswasam Review | Ajith | Nayanthara | Viswasam Movie review

PETTA MOVIE REVIEW | Petta Review | Rajinikanth | Vijay Sethupathi | Karthik Subbaraj | Anirudh

Thai month festival spl - 2019 | விளம்பி வருடம் தை மாதம் பண்டிகைகளின் சிறப்பு

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5

Power of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்: