கடலூர் மாவட்டத்தில் எச்.ஐ.வி எய்ட்ஸ் தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

சனிக்கிழமை, 13 மே 2017      கடலூர்

கடலூர் மாவட்டத்தில் எச்.ஐ.வி எய்ட்ஸ் தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் 11.05.2017 அன்று கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   தலைமையில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்க திட்ட இயக்குநர் மரு.செந்தில்ராஜ்,  முன்னிலையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

 மக்களுக்கு பயனுள்ள வகையில்

இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் அவர்களும்  எச்.ஐ.வி தடுப்பு பணிகள் மேற்கொண்டு எவ்வாறு திறம்பட செயல்படுவது என அனைத்து அலுவலர்களுக்கும் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்கள். மேலும் மாவட்டத்தில் இரத்த வங்கியின் செயல்பாட்டினை மேம்படுத்தி கடலூரில் இரத்தக் கூறு பகுப்பாய்வு செயல்பாட்டை முன்னேற்றி அதிகமான மக்களுக்கு எவ்வாறு பயனுள்ள வகையில் வழங்கலாம் என்பது குறித்த ஆலோசனைகளையும் கூறினார்கள்

கள ஆய்வு

முன்னதாக,  தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்க திட்ட இயக்குநர் மரு.செந்தில்ராஜ்,  கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் உள்ள இதர அலுவலர்களுடன் மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் கீழ் செயல்படும் நம்பிக்கை மையங்கள்ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள்), சுக வாழ்வு மையங்கள், இரத்த வங்கி மற்றும் ஏ.ஆர்.டி கூட்டு மருந்து சிகிக்சை மையங்களின் செயல்பாடுகள் பற்றிய கள ஆய்வு மேற்கொண்டார்.

பலர் பங்கேற்பு

இந்த ஆய்வுக்கூட்டத்தில்; இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.மாதவி, மாவட்ட எஸ்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.ஜவஹர்லால், மாவட்ட திட்ட மேலாளர் க.நாகராஜன், மாவட்ட எஸ்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு ஆகியவற்றின் இதர அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள ஆற்றுநர்கள், ஆய்வக உறுப்பினர்கள் இதர மருத்துவ அலுவலர்கள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: