முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஊட்டி வருகை குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன் தலைமையில் நடந்தது

சனிக்கிழமை, 13 மே 2017      நீலகிரி
Image Unavailable

தமிழக முதல்வர் ஊட்டி வருகை குறித்து அ.தி.மு.க.,வினரிடையேயான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி.,தலைமையில் நடந்தது.


121-வது மலர்காட்சி

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலான மூன்று நாட்களுக்கு 121_வது மலர்காட்சி நடைபெற உள்ளது. இக்கண்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்க உள்ளார். இது குறித்து நீலகிரி மாவட்ட அ.தி.மு.க.,செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி.,செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊட்டியில் நடைபெறும் மலர்காட்சியினை தொடங்கி வைக்கிறார். முதல்வர் வருகையையொட்டி மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பர்லியார், காட்டேரி, குன்னூர், ஊட்டி சேரிங்கிராஸ் மற்றும் தமிழகம் விருந்தினர் மாளிகை உள்ளிட்ட இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்ட எல்லையான பர்லியார் முதல் ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகை வரை வரவேற்பு தோரணங்கள், பதாகைகளை வைத்து சிறப்பு வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் வருகையின் போது கோத்தர், படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனமாடி வரவேற்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மலர்காட்சி விழாவில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.

ஆலோசனைக்கூட்டம்

இதனிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊட்டி வருவதையொட்டி அவருக்கு வரவேற்பு கொடுப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கழக செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி., தலைமையில் மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் டாக்டர் சி.கோபாலகிருஷ்ணன், பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.கலைச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு, ஆவின் இணைய தலைவர் அ.மில்லர், மாவட்ட அவைத்தலைவர் தேனாடு லட்சுமணன், நகர செயலாளர்கள் எஸ்.கே.ஜி.சுரேஷ்குமார்(ஊட்டி), சரவணகுமார்(குன்னூர்), பாசறை மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபால், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட செயலாளர் சம்பத் மற்றும் ஒன்றியச்செயலாளர்கள், கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஊட்டிக்கு வரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago