வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் விலையில்லா தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள்: மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன் வழங்கினார்

திங்கட்கிழமை, 29 மே 2017      வேலூர்
1

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிலப்பட்டா புதிய குடும்ப அட்டை, பட்டாமாறுதல் வேலைவாய்ப்பு கடனுதவி நிதியுதவி இலவச வீட்டுமனைப்பட்டா மாற்றுதிறனாளிகளுக்கு உதவி முதியோர் உதவித் தொகைகாவல்துறை பாதுகாப்பு மின் இணைப்பு மற்றும் பொதுநல மனுக்கள் என 365 மனுக்களை வழங்கினர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

காசோலை

இம்மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.10,062- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.20,000- வீதம் 10 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்திற்கான காசோலைகளையும் ஆக மொத்தம் 13 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்தி 10 ஆயிரத்து 62 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் வேணுசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் மணிவண்ணன் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து