கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற இணையதளம்: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 30 மே 2017      அரசியல்
karunanidhi(N)

சென்னை, தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளுக்கு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் மூலம் தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கலாம்.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி வருகிறது. மேலும் அன்றைய தினம் சட்டப்பேரவையில் 60 வருடங்கள் பணியாற்றும் கருணாநிதியை பாராட்டி அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பாராட்டு விழாவிற்கும் திமுக ஏற்பாடு செய்துள்ளது.

கருணாநிதியின் உடல் நலன் கருதி பிறந்த நாளன்று அவரை நேரில் சந்திப்பதை தவிர்க்குமாறு தொண்டர்களுக்கு அக்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இணைய தளம் மூலம் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

" www.wishthalaivar.com " என்ற இணையதளத்தை அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். கருணாநிதியின் ட்விட்டர் ஃபேஸ்புக் பக்கங்களிலும் பிறந்த நாள் வாழ்த்துகள் வரத் தொடங்கியுள்ள நிலையில் தற்போது தனி இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து