கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மக்கள் சிந்தனைப் பேரவை அஞ்சலி

சனிக்கிழமை, 3 ஜூன் 2017      ஈரோடு

கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவையொட்டி, ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமானின் மறைவையொட்டி, மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், கவிக்கோவின் இல்லத்துக்குச் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினார். பேரவையின் சென்னை மாவட்டச் செயலாளர் ந.அன்பரசு, செயற்குழு உறுப்பினர்கள் வீ.க.செல்வகுமார், கே.செல்லபாண்டியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். பேரவையின் தலைவர், கவிக்கோ இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அஞ்சலி ஏட்டில் தனது அஞ்சலி வாசகத்தைப் பதிவு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து