முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோத்தகிரியில் இலவச கம்ப்யூட்டரைஸ்டு அக்கவுண்டிங் பயிற்சி பங்கேற்று பயன்பெற அழைப்பு

சனிக்கிழமை, 3 ஜூன் 2017      நீலகிரி

கோத்தகிரியில் நடைபெறும் இலவச கம்ப்யூட்டைஸ்டு அக்கவுண்டிங் பயிற்சியில் பங்கேற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கரின் அறிக்கை-

8 முதல் பட்டப்படிப்பு வரை

கோத்தகிரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் இலவச கம்ப்யூட்டரைஸ்டு அக்கவுண்டிங் பயிற்சி வரும் 8_ந் தேதி முதல் தொடர்ந்து 30 நாட்கள் நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்கு குறைந்த பட்ச கல்வித்தகுதியாக 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம். பயிற்சியின் போது பயிற்சிக்கான உபகரணங்கள், தேனீர், காலை மற்றும் மதியம் உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். மேலும் பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும்.

அரிய வாய்ப்பு

இந்த பயிற்சியில் சேர விரும்பும் நபர்கள் தங்களது பெயர், முகவரி, கைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கோத்தகிரி, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் நேரில் விண்ணப்பம் பெற்று சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு இப்பயிற்சி மையத்தின் இயக்குநர் வசந்தகுமாரை 9629663764, 04266_273051 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். எனவே இந்த அரிய வாய்ப்பினை நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து