அரசு பள்ளிகளில் படித்தாலும் ஐ.ஏ.எஸ் ஆகலாம். தமிழில் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். ஆன மணிகண்டன் பேட்டி

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      கடலூர்
IAS SELECT 2017 06 08

நெய்வேலி அருகே உள்ள வடக்கு மேலூர் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி இவரது மனைவி வள்ளி இவர்கள் இருவரும் கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து தனது மகன் மணிகண்டனை படிக்க வைத்தனர்.இவர் இந்த ஆண்டில் நடந்த ஐ ஏ எஸ் தேர்வுக்கு தமிழிலேயே படித்து தமிழிலேயே தேர்வு எழுதி  தேர்ச்சியும் பெற்று சாதனை படைத்தார்.

 வரவேற்பு

இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் தனது சொந்த ஊரான வடக்கு மேலூருக்கு வந்தார்.அப்போது தன் கிராமத்தை சேர்ந்த ஒருவன் ஐ ஏ எஸ் தேர்வு தமிழில் எழுதி தேர்ச்சியும் பெற்று ஐ ஏ எஸ் ஆகிவிட்டான் என்ற மகிழ்ச்சியில் மூழ்கிய கிராம மக்கள் அனைவரும் மேல தாளம் முழங்க ஆர்ச்சி கேட்டில் நின்று வரவேற்பு அளித்து  ஆர்த்தி எடுத்து தனது சொந்த ஊரான வடக்கு மேலூருக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு அங்கு அவரது தாய் தந்தையார் தனது பிள்ளை மணிகண்டனுக்கு இனிப்புகள் ஊட்டி மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.அப்போது ,மணிகண்டன் நிருபர்களுக்கு பேட்டி  அளிக்கும் போது கூறியதாவது.

விடாமுயற்சியுடன் படித்தேன்

மிக எளிமையான குடும்பத்தில் பிறந்த என்னை எனது பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே படிக்க வைத்தனர்.ஐ.ஏ.எஸ் தேர்வில் நான்கு முறை தேர்வு எழுதி தோல்வி அடைந்தாலும் நான் சோர்ந்து போகாமலும் நான் தன்னம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் விடாமுயற்சியுடன் படித்து 6-ஆண்டுகள் கடினமான உழைப்பிர்க்கு பிறகு இப்போது எனக்கு வெற்றி கிடைத்துள்ளது.

அரசுப் பள்ளியில் படித்தே சாதிக்கலாம்

இந்த வெற்றியை இந்த நேரத்தில் எனது தாய் தந்தைக்கு காணிக்கையாக்குகிரேன் என்று ஆனந்த கண்ணீருடன் கூறினார். இளைஞர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது  எல்லாம் ஒன்று நாம் ஆங்கில வழியிலோ அல்லது சி.பி.எஸ் வழியிலோ படித்தால் தான் ஐ ஏ எஸ் தேர்ச்சி பெறமுடியும் என்று நினைக்காதிர்கள் அரசு பள்ளியில் படித்தாலும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் போதும் சாதாரணமாக இருக்கும் கிராம பகுதியில் படித்தாலும்  தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெற முடியும் அதற்கான வழிமுறைகள் நாளேடுகள், மாத இதழ்கள் வெப்சைட்கள் போன்ற வசதி வாய்ப்புகள் அதிகமாக நமக்கு கிடைக்கின்றன.

இளைஞர்களுக்கு வேண்டுகோள்

நமது அரசு 21-வயதில் இருந்தே போட்டி தேர்வு எழுத வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்த அறிய வாய்ப்பை அனைத்து மாணவர் செல்வங்களும் பயன் படுத்தி கொள்ளுமாறு இந்த தருணத்தில் சொல்லிக் கொண்டு எண்ணை கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம்.இவ்வாறு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து