செம்மேடு ஏரியில் வண்டல் மண் எடுக்கும் பணி கலெக்டர் இல.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017      விழுப்புரம்

செஞ்சி வட்டம் செம்மேடு ஏரியில் வண்டல் மண் எடுக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வியாழக்கிழமை துவக்கி வைத்தார்

 வண்டல் மண் எடுக்கும் பணி

மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் அணைகளில் உள்ள வண்டல் மண்ணை எடுப்பதற்கு பொதுமக்களுக்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்ததன் பயனா, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வண்டல் மண் எடுக்க விண்ணப்பித்தனர்.  அவ்விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, வண்டல் மண் எடுப்பதற்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. நஞ்சை நிலம் ஏக்கர் ஒன்றிற்கு 75 கனமீட்டரும் (25 டிராக்டர் லோடுகள்) புஞ்சை நிலம் ஏக்கர் ஒன்றிற்கு 90 கனமீட்டரும் (30 டிராக்டர் லோடுகள்) வீட்டு பயன்பாட்டிற்கு 30 கனமீட்டரும் (10 டிராக்டர் லோடுகள்) மண்பாண்டம் தொழில் செய்பவர்களுக்கு 20 கனமீட்டரும் (20 டிராக்டர் லோடுகள்) அளவிற்கு வண்டல் மண் மற்றும் சவுடு மண்ணினை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். விவசாய நிலங்களுக்கு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இலவசமாக வண்டல் மண் பெற்றுக்கொள்ளலாம். விவசாயிகளின் நலன் கருதி, வண்டல் மண் எடுப்பதற்காக சர்க்கரை ஆலைகளிடம் மாவட்ட நிர்வாகத்தினால் உதவி கோரப்பட்டிருந்தது.  தற்போது ராஜ்ஸ்ரீ சுகர்ஸ்  கெமிக்கல் லிட் தங்கள் பகுதியில் உள்ள ஏரிகளில் தாங்களே இலவசமாகவிவசாயிகளுக்கு வண்டல் மண் எடுத்துத் தர முன்வந்துள்ளனர். இவ்வாறு வண்டல் மண் எடுப்பதால் மண்ணின் வளம் அதிகரித்தல், இராசயண உரங்கள் பயன்பாடு குறைதல், நிலங்களின் அங்கச் சத்துக்கள் அதிகரித்தல், நிலத்தின் காற்றோட்டம் அதிகரித்தல், ஏரிகளில் நீர் பிடித்தல் அளவுகள் அதிகரித்தல் போன்றவைகள் ஏற்படும் என மாவட்ட ஆட்சியர் .இல.சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் செஞ்சி வெ.ஏழுமலை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வசேகர், செயற்பொறியாளர் சண்முகம், ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் கெமிக்கல் லிட் உபதலைவர் ரமேஷ், பொது மேலாளர் கதிரவன், துணை பொது மேலாளர் வரதராஜ், நிர்வாக மேலாளர் பெருமாள் மற்றும் வட்டாட்சியர், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து