முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதக்கம் வென்ற அழகப்பாபல்கலைக்கழக ஆதாரப் பள்ளி மாற்றுதிறனாளிகள்:

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      சிவகங்கை
Image Unavailable

காரைக்குடி:-இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியன இணைந்து நடத்திய தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் அழகப்பாபல்கலைக்கழக ஆதாரப் பள்ளிமாற்றுத்திறனாளி மாணவர்கள் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றனர். அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டி 05.06.17 முதல் 10.06.17 வரை அஹமதாபாத் பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் 19 மாநிலங்கள் பங்கேற்றன. அதில் 900க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்றனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து 42 மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்றனர். இவர்களில் 23 பேர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், அதில் காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக மாற்றுத் திறனாளி ஆதாரப் பள்ளியின் நான்கு மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் மனநல குறைபாடுடையவர்களுக்கான பிரிவில் திவ்யபாரதி 100மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கமும், மென் பந்து வீச்சில் வெண்கலப் பதக்கமும் வென்றார். மேலும் செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கான பிரிவில் கால்பந்து போட்டியில் ஊ. அருண்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். இம்மாணவர்களை அழகப்பாபல்கலைக்கழக துணைவேந்தர் சொ. சுப்பையா அவர்கள் வாழ்த்தி பாராட்டினார். இம்மாணவர்களை அஹமதாபாத்திற்கு அழைத்துச் சென்ற சிறப்பு ஒலிம்பிக் பாரதம் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் மற்றும் சிறப்பு ஆசிரியர் செல்வினாள் ஆகியோரையும் துணைவேந்தர் வெகுவாகப் பாராட்டினார். அப்போது அழகப்பாபல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஆதாரப் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துறைத்தலைவர் முனைவர் ஜெ. சுஜாதா மாலினி, மற்றும் முனைவர் கே. குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து