Idhayam Matrimony

நிதி நிர்வாகம் செய்ய தடை: கவர்னர் கிரன்பேடியின் உத்தரவு செல்லாது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      புதுச்சேரி

புதுவை கவர்னர் கிரன்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

 மோதல் போக்கு

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் மற்ற மாநிலங்களில் உள்ள கவர்னரை விடசற்று கூடுதலாக அதிகாரம் உள்ளது. புதுவை கவர்னராக கிரன்பேடி வந்தபிறகு இதை காரணமாக வைத்து அவர் அன்றாட அலுவல் பணிகளிலும் தலையிட்டு வருகிறார். அதிகாரிகளுக்கு அவரே உத்தரவுகளை பிறப்பிக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது கவர்னர் அன்றாட அரசு பணிகளில் தலையிடுவதா? என்று கூறி கவர்னருருக்கு முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால் கவர்னருக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இரு தரப்பினரும் மத்திய அரசிடம் இது தொடர்பாக புகாரும் தெரிவித்துள்ளனர். ஆனால்மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஒவ்வொரு விஷயத்திலும் கவர்னரும்,முதல்வரும மோதிக் கொள்ளவது  தொடர் கதையாக மாறி உள்ளது.

கவர்னர் அதிரடி

இந்த நிலையில் முதல்வருக்கான நிதி அதிகாரத்தை கவர்னர் திடீரென குறைத்துள்ளார். புதுவை யூனியன் பிரதேசம் என்பதால்இங்கு நிதி ஒதுக்கீடு தொடர்பாக பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இதன்படி கவர்னர் ரூ.50 கோடி வரை திட்டங்களுக்குநிதி ஒதுக்கீடு செய்ய முடியும். அதற்குமேல் என்றால் மத்திய உள்துறையின் அனுமதி பெற வேண்டும். முதல்வருக்கு ரூ.10 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்ய அதிகாரம் உள்ளது. துறை செயலாளருக்கு ரூ.2 கோடி வரை நிதி ஒதுக்கீடு  செய்ய அதிகாரம் உள்ளது. தற்போது முதல்வரின்நிதி ஒதுக்கீடு அதிகாரத்தை கவர்னர் ரத்து செய்து உத்தரவிட்டுளார்.  இந்த உத்தரவு தலைமை செயலாளர் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. அவர் கவர்னர் உத்தரவை மத்திய உள்துறை பார்வைக்கு அனுப்பி உள்ளார். இந்த நிலையில் தன்னுடைய அதிகாரத்தை பறிக்கும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என்றுமுதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உரிமை இல்லை

ஒருவருக்கு மத்திய அரசு கொடுத்த அதிகாரத்தை வைத்து  அடுத்தவர்களின் அதிகாரத்தை பறிக்க உரிமை இல்லை. கவர்னரின் செயல்வாடு தொடர்பாக நான் மத்திய உள்துறை மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளேன். கவர்னரின் உத்தரவு செல்லாது என்று தலைமை செயலாளரும் மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதி உள்ளார். உள்துறை அமைச்சகம் எங்கள் கடிதங்களை ஏற்றுக் கொண்டது. கவர்னர், முதல்வருக்கு என்று தனித்தனி அதிகாரம் உள்ளது. கவர்னருக்கு நேரடி அதிகாரம் இல்லாததால் எனக்குள்ள அதிகாரத்திற்குள் தலையிடுகின்றார். அவரது உத்தரவு செல்லாது. அதை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் எப்போதும் போல நிதி நிர்வாகத்தை நடத்துவோம். கவர்னர் தவறான தகவல்களால் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவர் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் நாராயணசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து