குறிஞ்சிப்பாடி மின் ஊழியர்களுக்கு தீயணைப்பு மற்றும் பணி பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      கடலூர்
kurinjippadi fire

குறிஞ்சிப்பாடி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களுக்கு தீயணைப்பு மற்றும் பணி பாதுகாப்பு குறித்து பயிற்சி கருத்தரங்கம் குறிஞ்சிப்பாடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 செயல்முறை விளக்க பயிற்சி

இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் மகாலிங்கமூர்த்தி தலைமை தாங்கி பேசியதாவது. கூரை வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் போது சிலுக்கு ஒயர்கலை பயன் படுத்த கூடாது. மல்டி ஒயர் பாக்ஸ் பயன்படுத்தினால் மின் அழுத்தம் அதிகமாக ஆகி தீ பிடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் தீ பிடித்து எரியும் போது  தீயை அணைக்க எவ்வாறு  உபகரணங்களை கையாள்வது குறித்து செயல்முறை விளக்க பயிற்சியிம் செய்தும்  காண்பித்தார். இப்பயிற்சியில் மின் உயர் அதிகாரிகளும், 200-க்கும் மேற்ப்பட்ட மின் ஊழியர்களும் கலந்துகொண்டு பயணடைந்தனர்.

பலர் பங்கேற்பு

மேலும் பயிற்சி கருத்தரங்கிர்க்கு குறிஞ்சிப்பாடி செயற்பொறியாளர் ஜெயந்தி ,முன்னிலை வகித்தார்.உதவி செயற்பொறியாளர் சிங்காரவேல்,வடலூர் உதவி செயற் பொறியாளர் இளங்கோவன், குள்ளஞ்சாவடி உதவி செயற் பொறியாளர் சண்முகம், குறிஞ்சிப்பாடி உதவி மின் பொறியாளர் பழனிவேல் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலை அலுவலர் செல்வராஜ் ஆகியோர்  இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து