தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் இப்தார் நோன்பு திறப்பு விழா

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      திருநெல்வேலி
nellai sirupanamai nala kulu ipthar nonbu

நெல்லையில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் இப்தார் நோன்பு திறப்பு விழா நடைபெற்றது.

 இப்தார் நோன்பு திறப்பு

பாளையங்கோட்டையில் நடைபெற்ற இந்த நோன்பு திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு மாவட்ட துணை அமைப்பாளர் ஏ.எம்.மீராஷா தலைமை தாங்கினார் , நிர்வாகிகள் ஏ.ஜெ.எம்.சாலமன், பீர் முகம்மது ஷா,குழந்தைவேலு,பேரின்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் , சாகுல் ஹமீது வரவேற்று பேசினார் , வழக்கறிஞர் அல்பி நிஜாம் விழாவை துவக்கி வைத்தார் , சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு சிறுபாண்மை மக்கள் நல குழு மாநில அமைப்பாளர் எஸ்.நூர்முகம்மது , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட  செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், மத நல்லிணக்க நடவடிக்கை குழு செயலாளர் வீ.பழனி ,சி.எஸ்.ஐ.தொடர்புத்துறை இயக்குனர் கிப்சன் ,பாதிரியார் அந்தோணி குருஸ் அடிகளார்  ஆகியோர் கலந்து கொண்டு ரம்ஜான் பண்டிகை  மற்றும் மத நல்லிணக்கம் குறித்து பேசினர

லர் பங்கேற்பு

விழாவில் சிறுபாண்மை மக்கள் நல குழு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.டி.முபாரக் அலி , மறுமலர்ச்சி முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில செயலாளர் ரசூல் மைதீன் , எஸ்.டி.பி.ஐ மாநில துணை தலைவர் நெல்லை முபாரக்,தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார் ,வரலாற்று ஆய்வாளர் மணிகுமார் , மருத்துவர் ராமகுரு,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எல்.கே.எஸ்.மீரான் மைதீன் ,மூத்த பத்திரிக்கையாளர் டி.எஸ்.எம்.ஓ.ஹசன் ,மேலப்பாளையம் அனைத்து சுன்னத்துல் ஜமாஅத் பள்ளிவாசல் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அப்துல் லத்தீப் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.விழாவில் சி.பி.எம். பாளை தாலுகா செயலாளர் ஸ்ரீராம், தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் ராஜேந்திரன் ,மாவட்ட துணை அமைப்பாளர் பால்ராஜ், வாலிபர் சங்க பாளை தாலுகா செயலாளர் கருணா , ஒய்வு பெற்ற தாசில்தார் முத்து முகமது ,ஒய்வு பெற்ற ஆசிரியர் பஸ்சுல் ஹக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து