செம்பருத்தி பூக்கள் கோபத்தை அதிகப்படுத்தும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி, மனதை அமைதிப்படுத்தும்

திங்கட்கிழமை, 17 ஜூலை 2017      வாழ்வியல் பூமி
hibiscus

Source: provided

செம்பருத்தி - பருத்தி வகையைச் சேர்ந்த ஒரு செடியாகும்.  சிவப்புநிறப் பூக்களையுடைய பருத்திச் செடியே செம்பருத்தி என்று அழைக்கப்படுகிறது.  காசிபியம் ஆர்போரியம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மால்வேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகளின் பூக்களே மருத்துவத்தில் பெருமளவு பயன்படுகின்றன.  இந்தியா, இலங்கை போன்ற வரள்வலய இடங்களில் வளரும் தாவர இனத்தைச் சேர்ந்தது.  இது கிழக்கு ஆசியாவில் தோன்றியது.  இதை சீன ரோஜா எனவும் அழைக்கின்றனர். 

இது மலேசியாவின் தேசிய மலராகும். இது பொதுவாக அழகுத்தாவரமாக வளர்க்கப்படுகிறது.  ஆயுர்வேதத்தில் இது ஜபா புஸ்பா, ருத்ர புஷ்ப, ரக்த கார்பாச என்றும் அழைக்கப்படுகிறது.  செம்பருத்திப் பூக்கள் இரண்டு விதமாக இருப்பதுண்டு.  ஒன்று தாமரை மலர் போன்று அடுக்கு அடுக்காகவும், தனித்தனியான இதழ்களுடனும் இருக்கும்.  இந்தப்பூக்களில் தங்கச்சத்து இருப்பதால், தங்க பஸ்பம் சாப்பிடும்போது இந்தப் பூ கஷாயத்தைத் துணை மருந்தாகச் சாப்பிடுவார்கள். இந்தச்செடியின் நுனி முதல் வேர் வரை அனைத்தும் பயன்தரக்கூடியது.

இதே குடும்பத்தைச் சார்ந்த செம்பரத்தை செடிகளை நாம் வீட்டில் அழகுக்காக வளர்க்கும் செடிகளாகும்.  செம்பரத்தை செடிகளும், செம்பருத்திச் செடிகளும் வேறு, வேறு செடிகளாகும். 

செம்பருத்தியில் ஸ்டெர்குலிக் அமிலம், மால்வாலிக் அமிலம், அஸ்கோர்பிக் அமிலம், குளுக்கோசைடுகள், சயனின், சயனிடின், தயமின், நியசின், கரோட்டின் ஆகிய வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.

சில குழந்தைகள் உடல் பலகீனத்துடன் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருப்பார்கள்.  இந்தக் குறையை போக்கிட, ஐந்து செம்பருத்திப்பூக்களை ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட்டு கால் லிட்டர் ஆகும்வரை நன்கு காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்து தொடர்ந்து கொடுத்து வர, சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் கிடைக்கும்.

செம்பருத்தி பூக்களிலுள்ள காசிபால் என்னும் சத்து நமது கோபத்தை அதிகப்படுத்தும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி, மனதை அமைதிப்படுத்துவதுடன், அதிக சூடு மற்றும் வைரஸ் தாக்குதலினால் ஏற்படும் அம்மை, அக்கி போன்ற நோய்கள் வராமல் நம்மை காக்கின்றன.

ஆண்மை பெருக்கத்திற்கும், உடல் வலிமைக்கும் செம்பருத்திப்பூக்களின் நடுவில் உள்ள மகரந்தக் காம்புகளை சேகரித்து, வெயிலில் நன்றாக உலர விடவேண்டும்.  உலர்ந்த மகரந்தக் காம்புகளை நன்கு தூளாக்கி, அந்த தூளை ஒரு கண்ணாடி புட்டியில் அடைத்து நன்கு மூடி வைக்க வேண்டும்.  பிறகு இந்த தூளை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி என்ற கணக்கில் தினமும் காலையும் மாலையும் பசும்பாலில் கலக்கிக் குடிக்க, உடலை நல்ல புஷ்டிகரமாகவும், ஆண்மையையும் பெருக்கும்.

பேன், பொடுகு தொல்லை நீங்க, இரவு படுக்கைக்குப் போகும் முன் செம்பருத்திப்பூக்களை எடுத்து தலையில் வைத்துக் கட்டிக்கொள்ள வேண்டும்.  இதேபோல் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் தலையில் உள்ள பேன், பொடுகு மற்றும் சுண்டுகளும் நீங்கிவிடும்.

செம்பருத்திப் பூவிதழ்களை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சியோ அல்லது தேங்காய் எண்ணெயில் ஊறவைத்தோ தலையில் தேய்த்து வந்தால் தலை சூடு தணியும். வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்ணை குணமாக்க, தினமும் ஐந்து செம்பருத்திபூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.

ரகசிய நோயான வெட்டை நோயை குணமாக்க, செம்பருத்திப்பூவை அதிகாலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.  இவ்வாறு சாப்பிட்டவுடன் ஒரு டம்ளர் பசும்பால் சாப்பிட்டால் நல்லது. இப்படியாக 40 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோயாக இருந்தாலும் குணமாகும்.

ஐந்து அல்லது ஆறு செம்பருத்திப்பூக்களின் இதழ்களை எடுத்து ஒரு சட்டியில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, அதை ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி எடுத்த கஷாயத்தை நான்கு மணிக்கு ஒரு முறை ஒரு தேக்கரண்டி வீதம் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் கல்லீரல் சம்பந்தமாக ஏற்படும் பலவித குறைபாடுகளையும் அகற்றிவிடலாம்.

ஐந்து செம்பருத்திப்பூக்களை எடுத்துக் கொண்டு ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக இதனை குடிக்க உடல் உஷ்ணம் தனியும்.

செம்பருத்தி பூவிதழ்களை மட்டும் பிரித்து அம்மியில் வைத்து நன்கு அரைத்து அரைநெல்லிக் காயளவு உருண்டையாக உருட்டி பாலுடன் கலந்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து 5 நாட்கள் குடித்து வந்தால் தேவையற்ற கோபம் மற்றும் பதட்டத்தினால் உண்டான உடல் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியுண்டாகும்.

செம்பருத்திப்பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் குடித்து வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும்.  பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள். 

செம்பருத்திப்பூக்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து கஷாயமாகக் காய்ச்சி குடித்து வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும். வெள்ளைப்படுதலும் குணமாகும்.
 
இருதய நோய் அணுகாமல் தடுக்க செம்பருத்திப்பூ இருநூறு எண்ணிக்கை எடுத்துக்கொண்டு சிறுசிறு துண்டாக்கி ஒரு பீங்கான் தட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு எலுமிச்சம் பழங்கள் இருபத்தைந்து எண்ணிக்கை எடுத்து பிழிந்து கொள்ள வேண்டும். அந்தச் சாற்றை செம்பருத்திப்பூ உள்ள பீங்கான் தட்டில் ஊற்றி நன்கு பிசைய வேண்டும்.  இந்த கலவையை வெயிலில் வைக்க வேண்டும். 

மாலையில் இதனை எடுத்து மீண்டும் பிசைய வேண்டும். எந்த அளவுக்கு நாம் டானிக் தயாரிக்கயிருக்கிறோமோ அதற்கு தகுந்தாற்போல் சர்க்கரையை ஒரு இரும்புச் சட்டியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் கலந்து தேன் பாகு பக்குவத்திற்கு நன்கு காய்ச்ச வேண்டும்.  பின்பு இதில் முன்பு தயார் செய்து வைத்திருந்த செம்பருத்திபூச்சாற்றை வடிகட்டி ஊற்றி கலக்கிக்கொள்ள வேண்டும். 

இந்த சர்பத் பக்குவ டானிக்கை தினமும் காலை மாலை என இரண்டு வேளையும் வேளைக்கு இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்துவர இருதய நோய் அணுகாமல் தடுக்கலாம்.  இருதய நோய் ஏற்பட்டவர்களும் இதனை குடித்துவர நோயை தடுத்துவிடலாம்.

செம்பருத்தி இலைகள் புற்று நோயை எதிர்த்து போராடுகிறது, இந்த இலைகளை வெந்நீரில் கலந்து குடிக்க புற்று நோயை குணமாக்கலாம். இதன் இலைகளை கொண்டு பேஸ்ட் செய்து புற்று நோயால் ஏற்பட்ட புண்களில் மீதும் தடவலாம்.

செம்பருத்தி இலையில் வைட்டமின் சி வளமையாக உள்ளதால், சளி, இருமல் மற்றும் காய்ச்சலை குணமாக்க இது பெரிதும் உதவுகிறது.

செம்பருத்தி இலையில் ஆற்றல் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது ஏற்படும் காய்ச்சல் போன்ற வெப்பத்தை தணிக்கவும் இது பெரிதும் உதவுகிறது.

செம்பருத்தி இலை உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து உடலின் தட்பவெப்ப நிலையை மேம்படுத்த உதவுகிறது.

சிறுநீரக பிரச்சனை மற்றும் செரிமான பிரச்சனை உள்ள நோயாளிகள் செம்பருத்தி இலை கலந்த தேநீரை பருகினால் சிறுநீரக தொற்றுக்களை சரி செய்து, இரத்த கொதிப்பை குறைக்கவும் உதவுகிறது.

செம்பருத்தி இலைகளை சீரான முறையில் மென்று வந்தால், செரிமானத்திற்கு உதவி புரிந்து உடல் எடையையும் குறைக்கச் செய்யும்.

Kaatrin Mozhi Review | Jyothika | Vidharth | Lakshmi Manchu | Radha Mohan

Vanaraja Chicken | How to Start Vanaraja Chicken farming | வனராஜா வகை நாட்டுக்கோழி வளர்ப்பு சுலபமா

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து