முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாடித்தோட்ட காய்கிற சாகுபடி திட்டம் தொடர்பான பயிற்சி வகுப்பு கலெக்டர் வெங்கடாசலம் துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 22 ஆகஸ்ட் 2017      தேனி
Image Unavailable

தேனி- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம்-2016-17-ன் கீழ் மாடித்தோட்ட காய்கறி சாகுபடி திட்டம் குறித்து நகர்புறப்பகுதிகளில் வசிக்கின்ற இல்லவாசிகளுக்கான பயிற்சி வகுப்பினை இன்று (22.08.2017) மாவட்ட ஆட்சித்தலைவர்  வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.
இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழக அரசு உணவு தானிய உற்பத்தியினை பெருக்கிட பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் மாடித்தோட்ட காய்கறி சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காய்கறிகள் நம் உணவில் இன்றியமையாத ஒன்றாகும். சைவ உணவு சாப்பிடுவர்களுக்கு காய்கறிகள் ஒரு முக்கியாக உணவாக இருக்கிறது. சரிவிதித உணவின் அடிப்படையில் வயது வந்தோருக்கு 85 கிராம் பழங்களையும், 300 கிராம் பழங்களையும் நமது உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது உணவு வல்லுநர்களின் கூற்று. ஆனால் நாம் 120 கிராம் காய்கறிகளை தான் எடுத்துக் கொள்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இதனை கருத்தில் கொண்டு நமக்கு தேவையான காய்கறிகளை நாமே பயிரிட்டுக் கொள்ள வீட்டுத்தோட்டம் அமைத்து காய்கறிகளின் உற்பத்தியை பெருக்கிட வேண்டும். உடற்பயிற்சிக்கு என்று தினமும் செலவிடும் நேரத்தை காய்கறி தோட்டம் அமைப்பதிலும்  அதனை பராமரித்தலிலும் செலவிட்டால் அது நமது உடலுக்கு ஒரு பயிற்சியாக அமைவதோடு மட்டுமல்லாமல், நம் மனதிற்கு புத்துணர்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது. வீட்டு தோட்டத்தில் நாமே பயிரிடுவதால் காய்கறிகளும், பழங்களும் எந்தவித நச்சுப் பொருட்களும் கலப்பிடம் இல்லாமல் கிடைப்பதோடு சுவையும் கூட்டி கொடுக்கிறது.
ஆனால், நகர்ப்புறங்களில் வாழும் மக்களுக்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் வீட்டின் பின்புறம் தோட்டம் அமைப்பது முடியாத காரியமாகும். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு நகர்புறவாழ் மக்களுக்காக மானியத்தில் மாடித்தோட்டத்தை ஊக்குவிக்கும் திட்டத்தினை செயல்படுத்திகிறது. எனவே, பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள இல்லவாசிகள் மாடித்தோட்ட காய்கறிகளின் பயன்கள், மாடித்தோட்டத்தின் தனிச்சிறப்புகள் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
மேலும், இப்பயிற்சி வகுப்பில், மாடித்தோட்ட காய்கறி சாகுபடி திட்டத்தின் கீழ் 200 பயனாளிகளுக்கு ரூ.1,04,000ஃ- மதிப்பலான மாடித்தோட்ட இடுபொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
பயிற்சி வகுப்பில் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை துணை இயக்குநர் கிஷோர்குமார்   மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சந்திரசேகரன்   செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல்   பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி பேராசிரியர் முனைவர்.சத்தியமூர்த்தி   இல்லவாசிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து