முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெண்டுல்கரின் வரலாற்றுச் சாதனைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அலஸ்டைர் குக்

செவ்வாய்க்கிழமை, 22 ஆகஸ்ட் 2017      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியதன் மூலம், சச்சின் தெண்டுல்கரின் வரலாற்றுச் சாதனைகளுக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டைர் குக் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளார்.

கிரிக்கெட் கடவுள்

‘இந்திய கிரிக்கெட் கடவுள்’ என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 200 போட்டியில் விளையாடி 51 சதங்களுடன் 15921 ரன்கள் குவித்துள்ளார். 51 சதங்களும், 15921 ரன்களும் என்பது வரலாற்றுச் சாதனை. சச்சின் காலத்தில் விளையாடிய ரிக்கி பாண்டிங் 13378, கல்லீஸ் 13289, டிராவிட் 13288, சங்ககரா 12400, லாரா 11953, சந்தர்பால் 11867, ஜெயவர்தனே 11814 ரன்கள் குவித்துள்ளனர்.

மிகமிகக் கடினம் ...

டி20 கிரிக்கெட் போட்டி தலை தூக்கியதால் டெஸ்ட் போட்டிகளில் இனிமேல் வரும் வீரர்கள் 200 போட்டிகளுக்கு மேல் விளையாடுவது கடினம். அப்படி விளையாடினாலும் தெண்டுல்கர் அடித்துள்ள 15921 ரன்களை சேர்ப்பது மிகமிகக் கடினம் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதனால் சச்சின் தெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாதனையாளராக திகழ்வார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

145 போட்டிகளில் ...

ஆனால், தெண்டுல்கர் சாதனைக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டைர் குக் அச்சுறுத்தலாக இருந்து வருகிறார். இங்கிலாந்து அணியில் மிகவும் இளம் வயதில் அறிமுகமான அலஸ்டைர் குக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

அலஸ்டைர் குக் 145 போட்டிகளில் விளையாடி 31 சதங்களுடன் 11568 ரன்கள் குவித்துள்ளார். சச்சின் தெண்டுல்கரை விட 4353 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளார். தற்போது அவருக்கு 32 வயதுதான் ஆகிறது.

மீண்டும் ஃபார்முக்கு...

கடந்த இரண்டு ஆண்டுகளாக குக் சிறப்பான வகையில் ஆடவில்லை. இதனால் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறலாம் அல்லது அணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற செய்தி வந்து கொண்டிருந்தது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

தொடர் அச்சுறுத்தல்...

இப்படியே விளையாடினால் குக் இன்னும் 4 வருடத்திற்கு அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. அப்படி இடம்பிடித்தால் 4353 ரன்கள் எடுக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை சுமார் 500 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தாலும், சாதனைக்காக குக்கை இங்கிலாந்து அணி தொடர்ந்து வலியுறுத்தும். இதனால் குக் சச்சின் தெண்டுல்கரின் சாதனைக்கு அச்சுறுத்தலாகவே உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து