முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ரூ.15.02 கோடி கடன்கள் - நலத்திட்ட உதவிகள் அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ வழங்கினார்

புதன்கிழமை, 23 ஆகஸ்ட் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.-மதுரை மாவட்டம், பழங்காநத்தத்தில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ், தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு 1065 நபர்களுக்கு ரூ.15,02,95,922 மதிப்பில் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கி மூலம் கடன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் அம்மா அவர்களின் ஆட்சியில் கூட்டுறவுத்துறை மகத்தான வளர்ச்சி அடைந்து இந்தியாவிற்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது.
2016 நவம்பர் 23ந் தேதி 1755 கோடி ரூபாய் நபார்டு வங்கி உதவியுடன் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை அறிந்து கேரளா, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் தங்களது மாநிலங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்தினார்கள். கடந்த 6 ஆண்டுகளில் அனைத்து கூட்டுறவு வங்கிகளும், வாடிக்கையாளர்களுக்கு முழுமையான தொழில்நுட்ப வசதிகளை வழங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு இணையாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகளில் இதுவரை எவ்வித ்டு நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி பணத்தினை முதலீடு செய்து பயன்பெறலாம்.
கூட்டுறவு வங்ககளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 7 சதவீதத்திலிருந்து 21 சதவீதம் ஊதிய உயர்வினை அம்மா வழங்கினார்கள். மேலும் அனைத்து பணியாளர்களுக்கு மருத்துவக்காப்பீடு வசதி செய்து தரப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்படும் நியாய விலைக்கடைகள் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் விலையில்லா அரிசி மற்றும் பல்வேறு உணவுப்பொருட்களை மலைப் பிரதேசத்திலுள்ள மக்களுக்கும் வழங்கி இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.
கடந்த 6 ஆண்டுகளில் 31.03.2017 முடிய மாநில அளவில் 58,57,408 விவசாயிகளுக்கு ரூ.27,422.22 கோடியும், மதுரை மாவட்டத்தில் மட்டும் 92,384 விவசாயிகளுக்கு ரூ.569.85 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. வறட்சி நிவாரணமாக தமிழகம் முழுவதும் உள்ள 19,45,568 விவசாயிகளுக்கு ரூ.1,284.58 கோடியும், மதுரை மாவட்டத்தில் 52,777 விவசாயிகளுக்கு ரூ.22.75 கோடியும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை மாவட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 1065 பயனாளிகளுக்கு ரூ.15கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் இன்று (22.08.2017) வழங்கப்படவுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு பல் உதவிகளை கூட்டுறவு சங்கம் மூலம் செய்து வரும் முதல் அரசு தமிழக அரசு தான். இது இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது மிகவும் பழமையான வங்கி ஆகும். இந்த வங்கி 43 கிளைகள் கொண்டு பல்வேறு கடன் உதவிகள் மற்றும் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.
கூட்டுறவு வங்கி மூலம் தான் சில பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடிகிறது. மேலும் இக்கூட்டுறவு சங்கங்களின் மூலம் செயல்படுத்தப்படும் அம்மா மருந்தகம் 15 சதவீதம் தள்ளுபடி விற்பனையில் ஏழை, எளிய மக்களுக்கு மருந்துப்பொருட்களை வழங்கி வருகிறது. பொது விநியோகத்திட்டத்தின் கீழ் விலையில்லா அரிசி மற்றும் பல்வேறு உணவுப்பொருட்களை நியாயவிலைக்கடை மூலம் வழங்கி வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள சுமார் 2.5 இலட்சம் குடும்ப அட்டைகள் அனைத்தும் மின்னணு குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களின் விபரங்களை குறுஞ்செய்தி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
மேலும் அனைத்து ஊரக மற்றும் நகரப்பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் இ.சேவை மையம் தொடங்கப்பட்டு, இதன் மூலம் பொதுமக்களுக்கு சாதி சான்றிதழ், ண உதவி நலத்திட்ட சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் மற்றும் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசின் சார்பில் சுகாதாரத்துறையின் மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துக்காப்பீட்டு திட்டமும், மாவட்ட தொழில் மையம் மூலம் இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற 25 சதவீத மானியம் வழங்கும் திட்டமும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் ண நிதியுதவி திட்டமும், கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகையாக ரூ.18000 வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
முன்னதாக இவ்விழாவில் 9 நபர்களுக்கு ரூ.3,15,000 மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் கடன் உதவித்தொகையும், 758 நபர்களுக்கு ரூ.1,74,15,000 மதிப்பில் மகளிர் சுயஉதவிக்குழு கடன் தொகையும், 214 நபர்களுக்கு ரூ.1,77,79,600 மதிப்பில் முதலீட்டுக்கடன் தொகையும், 3 நபர்களுக்கு ரூ.12,00,000 மதிப்பில் வீட்டு அடமானக் கடன் தொகையும், 10 நபர்களுக்கு ரூ.29,70,000 மதிப்பில் சம்பளக்கடன் தொகையும், 49 நபர்களுக்கு ரூ4,90,000 மதிப்பில் சிறு வணிக கடன் தொகையும், 22 நபர்களுக்கு ரூ.11,01,26,322 மதிப்பில் பணியாளர் சிக்கன நாணயச்சங்க கடன் தொகையும் என மொத்தம் 1065 நபர்களுக்கு ரூ.15,02,95,922 மதிப்பில் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையர் டாக்டர்.அனீஷ்சேகர், மண்டல இணைப்பதிவாளர் வி.எம்.சந்திரசேகரன், இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குநர் பி.செந்தில்குமார், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கி லிட்., பெருந்தலைவர் கே.துரைபாண்டியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து