முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புளுவேல் கேம் மொபைலில் அனுப்பினால் நடவடிக்கை ராமநாதபுரம் கலெக்டர் முனைவர் நடராஜன் எச்சரிக்கை

புதன்கிழமை, 6 செப்டம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- புளுவேல் விளையாட்டினை செல்போனில் அனுப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் முனைவர் நடராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 புளுவேல் விளையாட்டை மொபைலில் ஷேர் செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:- இணையதளம் மற்றும் நவீன செல்லிடைப் பேசிகள் மூலமாக பரவி வரும் புளுவேல் என்னும் கணினி விளையாட்டு 13 வயது முதல் 25 வயதுகள் வரையிலான வளர் இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் அதிக அளவில் இணையதளம் உபயோகிக்கும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களையும் இணையதளம் விளையாட்டுக்களை அதிக நேரம் விளையாடும் குழந்தைகளையும் பாதிப்படையச் செய்து உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் இணையதள பயன்பாட்டை ஆசிரியர்கள் கூர்ந்து கண்காணித்து மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்.
 பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அதிக நேரம் இணையதள விளையாட்டு விளையாடுகிறார்களா? இரவு நேரங்களில் தனியாக அல்லது தனி அறையில் அல்லது மொட்டை மாடியில் இணையதளத்தில் விளையாடுகிறார்களா? என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். தற்போது உள்ள குழந்தைகளிடம் தமிழக கலாச்சார விளையாட்டுகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்களை அவர்களிடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். யாரிடமும் பேசாமல் தனியாக இருந்தாலோ, குழந்தைகளிடம் வழக்கமான இயல்பு நிலையில் மாற்றம் காணப்பட்டாலோ உடன் கவனித்து சரி செய்ய வேண்டும்.
 குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிடவும், மனம் விட்டு பேசவும் வேண்டும். விலை உயர்ந்த மொபைல் போனை வாங்கி கொடுக்கக் கூடாது. இரவு நேரங்களில் குழந்தைகளை அதிக நேரம் கண்விழிக்க வைக்கக்கூடாது. புளுவேல் விளையாட்டிலிருந்து குழந்தைகளை மற்றும் மாணவ, மாணவியர்களைப் பாதுகாக்க பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிக கவனம் செலுத்தி மேற்குறித்தவாறு உரிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இவ்வாறு கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து