இளைஞர் ஈர்ப்பு முகாம்

சனிக்கிழமை, 7 அக்டோபர் 2017      ஈரோடு
01

 ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டத்திற்குட்பட்ட கரட்டடிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 06.10.2017 அன்று மாலை 2.30 மணியளவில் ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் இளைஞர் ஈர்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

 இம்முகாமிற்கு ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் திரு.வி. தெய்வநாயகம் அவர்கள் தலைமை தாங்கினார்.  கோபிசெட்டிபாளையம் கூட்டுறவுசார்பதிவாளர்ஃகளஅலுவலர் .என். ஞானசுந்தரம் ; சிறப்புரையாற்றினார்கள்.  அவர்தம் உரையில் காலத்திற்கேற்பவும் கூட்டுறவாளர்கள் பெற்ற அனுபவங்களுக்கேற்பவும் இவ்வியகத்திற்கு விளக்கங்கள் கூறப்பட்டு வருகின்றன. இதன் கொள்கைகள் காரணமாகவே இவ்வியக்கம் இன்னும் தொடர்ந்து வெற்றிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.  கல்வி மற்றும் பிரச்சாரம் மூலம் கூட்டுறவு இயக்கத்தைப் பரப்ப முயலுதல் மிகவும் முக்கிய நோக்கமாகும்.  கூட்டுறவுச் சங்கத்தில் அனைவருக்கும் அனுமதி உண்டு.  இதில் மனிதத் தன்மைக்குச் சிறப்பிடம் அளிக்கப்படுகிறது என்று கூறினார்.

இளைஞர் ஈர்ப்பு முகாமில் மாணவப் பருவத்திலேயே கூட்டுறவின் கொள்கைகள் மற்றும் தத்துவங்களை எடுத்துரைத்து கூட்டுறவின் அவசியத்தை உணரச்செய்ய வேண்டும் என்பதே நோக்கம்.  கூட்டுறவில் வேலை வாய்ப்பு பெற ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் சேர்ந்து பயனடையக் கேட்டுக் கொண்டார்.  கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி படிப்பிற்கு பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்குரிய இடங்கள் ஒதுக்கப்படும்.  கணினி மற்றும் நகைமதிப்பீடு தொழில்நுட்ப பயிற்சிக்களுக்கான சான்றிதழ்கள் இப்பயிற்சியிலேயே வழங்கப்படும் என்றுஎடுத்துரைத்து இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறக் கேட்டுக்கொண்டார்.

 இம்முகாமில் ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய கூட்டுறவு பிரச்சார அலுவலர் . கோ. வெங்கடராமன்  கூட்டுறவு இயக்க வரலாறு பற்றி எடுத்துரைத்தார். முன்னதாக கரட்டடிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சி.கே. செல்வி அவர்கள் வரவேற்றார்.  உடற்கல்வி ஆசிரியர் .பி. சோமசுந்தரம்  நன்றியுரையாற்றினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து