முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர்இல.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 23 அக்டோபர் 2017      விழுப்புரம்

விழுப்புரம் கலெக்டர்அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கலெக்டர்இல.சுப்பிரமணியன்  தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம்
 

இக்கூட்டத்தில் முதியோர் ஓய்வூதியத் தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் ஆகியன கோரி 389 மனுக்கள் வரப்பெற்றன.  அவை அனைத்தையும் கலெக்டர் பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.இக்கூட்டத்தில் முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு அலுவலகத்தில் இருந்து வரப்பெற்ற மனுக்கள், குறைகேட்பு நாள் கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்கள்,  அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களிடம் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மற்றும் அம்மா அழைப்பு மைய கோரிக்கைகள் ஆகியவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிலுவைக்கான காரணம் ஆகியன குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.  பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.   முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு அலுவலகத்திலிருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ், திண்டிவனம் வட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த ஓய்வூதியர் வெங்கடேசன்  என்பவருக்கு ரூ.28,000-க்கான காசோலை மற்றும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு முறையே ரூ.10,000-, ரூ.7,000-, ரூ.5,000-க்கான காசோலையையும் கலெக்டர்இல.சுப்பிரமணியன்  வழங்கினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சிம்டன்ஜிட்சிங் கஹ்லான் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் இராஜேந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் வழங்குடியினர் நல அலுவலர் அருனாசலம், உதவி ஆணையர் (கலால்) ஏ.இராஜேந்திரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் அன்பழகி, அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து