துயருற்றவர் வாழ்வில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் 'இரக்க உணர்வு'

செவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017      மாணவர் பூமி
isaiah

Source: provided

மற்றவர்களது உணர்வில் ஆழ்ந்து ஈடுபடும் பண்பே இரக்க உணர்வாகும். நமக்கு அடுத்திருப்பவரது உணர்வையும், பரிவையும் புரிந்துகொண்டு, அவர்களது இடுக்கண்களையும், துன்பங்களையும் துயரங்களையும் பகிர்ந்து கொள்ளும் ஆற்றலே இரக்கவுணர்வாகும். துன்பத்தில் ஆழ்ந்து கிடப்பவரது பாதிப்பை உணர்ந்து கொள்வதற்கு இரக்கவுணர்வு உதவுகிறது.  மனத்தளவில் இருவேறு மனிதர்களுக்கு இடையில் நிலவும் இடைவெளியை இரக்கவுணர்வு இணைத்து விடுகிறது. துன்பத்தால் வீழ்ந்து கிடப்பவரது உள்ளத்தின் உணர்வுகளை அதே அலைகளின் அளவில் ஒத்து உணரச்செய்கிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் வழங்குமாறு இரக்கவுணர்வு தூண்டுகிறது. ஒருவருக்கு ஏற்பட்ட சோகத்தைத் தாங்கிக்கொள்ளுமாறு ஊக்கத்தையும், வலிமையினையும், ஆறுதலையும் அது வழங்குகிறது. சகமனித உணர்வு, தயவு ஆகியவற்றின் காரணமாக இரக்கவுணர்வு பெருக் கெடுக்கின்றது. மென்மையான இதயமும், பிறர் உணர்வின் மீதான அக்கறையும், துன்பத்தைப் பற்றிய கரிசனையும் காட்டுவது மெல்லுணர்வு எனலாம். அது ஒருவரது உள்ளத்தை மென்மையினாலும், அருள் பண்பினாலும் போர்த்துகின்றது. மனிதர்கள் சோதனையினாலும், இன்னல்களாலும், இடுக்கண்களாலும் வருந்தும்பொழுது ஆறுதல் அளிக்கிறது. துயருற்றவர் மனதில் இரக்கவுணர்வு தன்னம்பிக்கையைக் கட்டி யெழுப்புகிறது. அன்பைச் செயலளவுக்குக் கொண்டு செலுத்தும் ஆற்றல்மிக்கதாக இரக்கவுணர்வு திகழ்கிறது.

நிகழ்வு :  “பாரிசு மாநகரத்தில் இரண்டு விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்பட்ட சிறப் பான வரவேற்பில் பங்குபெறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பல்லாயிரக்கணக் கான மக்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு வெளியில் ஒன்று கூடினர். அவர்கள் இருவரும் வெளியே வந்து நின்ற பொழுது ஆம்ஸ்டிராங் முன்னாலே வந்தார்; காவல்துறையினர் ஏற்படுத்தியிருந்த தடைகளை உடைத்துவிட்டு, நேராகத் தான் சென்று அமரக்காத்திருந்த காரை நோக்கி அவர் செல்லவில்லை! வேறு திசையில் சென்றார். அனைவர் கண்களும் அவர் பின்னே சென்றன. சக்கர நாற்காலியில் அவரைக் காணவந்த மனிதரை நோக்கிச் சென்றார்.

கால்கள் ஊன முற்றிருந்த அந்த மனிதரால் நடக்க இயலாது. தனது அறையின் சன்னல் வழியாக ஆம்ஸ்டிராங் அவரைப் பார்த்திருந்தார். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த நாங்கள் அனைவரும் அழகானதொரு காட்சியினைக் கண்டோம். பழைய நெருங்கிய நண்பர்கள்போல இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். என்னருகில் இருந்த நண்பர் என்னிடம் சொன்னார்: “அற்புதமான காட்சி இல்லையா? உலகிலேயே வேகமாகப் பயணம் செய்யும் மனிதரும் உலகில் மெதுவாகச் செல்லும் மனிதரும் சந்தித்துக்கொள்கிறார்கள்.” அப்போது என் உள்ளத்தில் ஒரு கேள்வி உதய மாகிறது. எது மிகக் கடினமானது? நிலவுக்குச் செல்வதா? அல்லது நடையற்றுப் போன மனிதர் மீது அக்கறை காட்டுவதா?

இரக்கவுணர்வைப் பண்படுத்தி வளர்த்துக் கொள்ள வழிமுறைகள் :  துன்பத்தில் கிடந்து தவிப்போரை உணர்வுப்பூர்வமாகப் புரிந்து கொள்ளுதல், மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், நெருக்கடியான வேளைகளில் ஒருவரைப் புரிந்துகொண்டு இசைவான உணர்வை வெளிப்படுத்துதல், மூளை வளர்ச்சி குன்றிய, மனநிலை பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்தல், மக்கள் நோயினால் பிடிக்கப்பட்டிருந்தால் அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளுதல், பிறர் துன்பங்களை எதிர்கொள்வதற்கு உதவி புரிதல், மற்றவர்களிடம் இனிமையாக வும், ஈடுபாடுகாட்டும் முறையிலும் நடந்துகொள்ளல், நலிவுற்றவர்பால் அக்கறை காட்டுதல், துன்பத்தில் வீழ்ந்து கிடப்போருக்குக் கைகொடுத்து உதவுதல், நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறுதல், வயது முதிர்ந்தோர், புறக்கணிக் கப்பட்டோரைப் பேணுதல், இயற்கைச் சீற்றங்களாகிய வெள்ளம், தீ விபத்து, நிலநடுக்கம், புயல், மழை முதலிய பாதிப்புகள் ஏற்படும்போது அக்கறையை வெளிப்படுத்துதல்.

சேவை :  அறிவு, உள்ளம், உடல் ஆகியவற்றைப் பிறர் நலனுக்காக அவர்களது தகுதி, சாதி, வர்க்கம் பாராமல் செயல்படுத்துவதே சேவை. தன்னலமற்ற சேவை புரிந்து பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்குச் செயல்படுவதே சேவையாகும்.  உடல் உழைப்பின் மூலமாக வளர்ச்சிப் பணிகளுக்கான பங்களிப்பை ஒருவர் வழங்குவதே சேவையாகும். கல்விப் பயிற்சி வாயிலாக ஒருவரது உள்ளடங்கிய ஆற்றல்களைக் கண்டுகொள்ள சேவைச் செயல்பாடு உதவுகிறது.
மற்றவர்களது தேவைகளைக் குறித்துச் சேவை அக்கறை கொள்ளுகிறது. ஒருவருடைய நன்னடத்தை, ஆளுமை ஆகியவற்றின் வளர்ச்சிக்கான ஏராளமான வாய்ப்புகளைச் சேவை ஏற்படுத்துகிறது. கைம்மாறு கருதாமல் தன்னலமின்றி நம்மைத் தருவதற்குச் சேவை உறுதி தருகிறது.

கதை : ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார் ஒருவர். வுழியில் கள்வர்கள் அவரைப் பிடித்துக் கொண்டனர். அவரிடம் இருந்த ஆடை உள்ளிட்ட எல்லாவற்றையும் பறித்துக்கொண்டனர். அவரைக் காயப்படுத்திக் குற்றுயிராய்க் கிடக்குமாறு அடித்துப் போட்டனர். சாலையோரம் கிடந்த அவரைப் பார்த்தவாறு பலரும் கடந்து சென்றார்கள். ஆனால் எவருமே காயமுற்றவருக்கு உதவி செய்ய முன்வரவே இல்லை.

ஆனால் ஏழை மனிதர் ஒருவர் கருணையோடு அவரைக் கண்டு மனமிரங்கினார். அவரது காயங்களைக் கட்டினார். அவரைத் தூக்கினார்; மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார் - அவர் அருகிலேயே இருந்து கவனித்துக்கொண்டார். மறுநாள் மருத்துவமனை உரிமையாளருக்குத் தம்மிடமிருந்த பணத்தையும் எடுத்துக்கொடுத்தார். இரண்டு நாட்கள் கடந்த பிறகு தாம் திரும்பி வரும்போது ஆகும் செலவுகளைக் கொடுத்துவிடுவதாக உறுதி கூறினார்.

சேவை மதிப்பு நலனைப் பண்படுத்தி உருவாக்கிக் கொள்ள வழிமுறைகள் :  தன்னலமற்ற சேவை மனப்பான்மையுடன் மற்றவர்களுக்கு நன்மை செய்தல். தேவை கருதி எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சிறிய உதவிகள் செய்தல். மற்றவருக்கு உதவி புரிதல். ஆறுதல் கூறுதல், வழிகாட்டுதல். வலியச் சென்று பிறருக்கு உதவுதல். பிறருக்கு உதவி செய்வதற்காக சொந்தத் தேவைகளையும் நலன்களையும் தியாகம் செய்தல். பிறர் எளிதில் சந்திப்பதற்கு உரியவராக இருத்தல். இன்னல்கள் நேரிடும்போது தக்க நேரத்தில் உதவுதல். முதியோர், பார்வையற்றோர் இல்லங்களுக்குச் சென்று உதவுதல். நாட்டுக்கு நற்பணி செய்யத் தயாராக இருத்தல்.

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy DIY Arts and Crafts | How to make Coffee cup base for kids with 13 Ice Cream Sticks | GArts - 1

Sarkar Review | Vijay | AR Murugadoss | Keerthy Suresh | A R Rahman | Sarkar Movie Review

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

Manpaanai Meen Kulambu recipe in Tamil | Traditional Fish Curry | Gramathu Meen Kolambu

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து