கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்ட பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் மற்றும் சுகாதார பணிகள்: கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு

புதன்கிழமை, 1 நவம்பர் 2017      கிருஷ்ணகிரி
2 a

 

கிருஷ்ணகிரி நகராட்சி சேலம் ரோடு, கிருஷ்ணன்கோயில்தெரு, ராசிவீதிக்குட்பட்ட பகுதி குடியிருப்புகளில் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதார பணிகளை கலெக்டர் சி.கதிரவன் நேற்று (01.11.2017) வீடு வீடாக நேரில்சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

 

இவ்வாய்வின் போது குடிநீர் தொட்டிகளில் லார்வா கொசு புழுக்கள் இல்லாமல் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளதா என்பதையும், வீடுகளின் மேற்கூரைகளில் வைக்கப்பட்டிருந்த தேங்காய் மட்டைகள், பழைய டயர்கள், பிளாஸ்டிகள் கழிவுகள், காலி டப்பாக்கள் ஆகியவற்றை அகற்றும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கிருஷ்ணன் கோயில் தெரு பகுதியில் இனிப்பு வகைகள் தயாரிக்கும் தொழில் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் டம்பளர்கள், பிளாஸ்டிக் கவர்கள் உள்ளதை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். மேலும் கழிவு எண்ணை, தேங்காய் மட்டைகள் கழிவு பொருட்களை உடனடியாக அகற்றவும், உணவு பாதுகாப்பு மருத்துவ அலுவலர்களை கொண்டு ஆய்வு செய்து ரூ. 4000 ஆயிரம் அபராதம் விதிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து அப்பகுதியில் இயங்கிவரும் தனியார் மாங்காய் மண்டியில் மேற்கூரைகளில் மழை நீர் தேங்கியுள்ள பகுதியில் லார்வா புழுக்கள் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக ரூ. 4000 ஆயிரம் விதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தை ஆய்வு செய்ய கலெக்டர் அவர்கள் குடிநீர் தொட்டிகள் மற்றும் சுற்றுபுறம் தூய்மையாக பராமரிக்காததையடுத்து ரூ. 5000 அபராதம் விதிக்கவும், ஒரு வீட்டு உரிமையாளருக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கவும் , குடிநீர் தொட்டி மற்றும் மேற்புறங்களை தூர்மையாக பாராமரிக்காத வீடுகளின் குடிநீர் இணைப்பு மற்றும் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி, துணை இயக்குநர் ( சுகாதார பணிகள் மரு.பிரியாராஜ், நகராட்சி ஆணையாளர் ( பொ) சுசில்தாமஸ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மோகனசுந்தரம் வட்டாட்சியர் கன்னியப்பன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து