அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: வழங்கிட கைவினைஞர் இளைஞர் பேரவை கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      திருவண்ணாமலை

 

அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை உடனடியாக வழங்கிட வேண்டும் என அரசை வலியுறுத்தி கைவினைஞர் இளைஞர் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

துவக்க விழா

தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள், தச்சர் நகை தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர் இளைஞர் பேரவையின் திருவண்ணாமலை மத்திய மாவட்ட சங்க துவக்க விழா திருவண்ணாமலை தேரடித் தெருவில் உள்ள விசுவ பிராமணர் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆர்.முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் டி.பழனி ஆச்சாரி, பி.சண்முகம் ஆச்சாரிநு மாவட்ட இணை செயலாளர் ஆர்.சுரேஷ்பாபு, இ.மனோகரன், மாவட்ட துணை செயலாளர்கள் கே.ராஜாமணி, ஏ.ராமு, எம்.குப்பன் ஆச்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் மாவட்ட செயலாளர் இ.லோகநாதன் வரவேற்றார்.

கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.முத்துரட்சகன் கலந்து கொண்டு மத்திய மாவட்ட சங்கத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். பிறகு புதிய நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

மணல் தட்டுப்பாட்டை போக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்நு அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை உடனடியாக வழங்கிட மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்நு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியத்தை ரூ.1000த்திலிருந்து ரூ.2000மாக உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் எஸ்.தண்டபாணி ஆச்சாரி நன்றி கூறினார்.

 

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து