கடலூர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      கடலூர்
cuddalure collector visit govt school

கடலூர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர்              பிரசாந்த் மு.வடநேரே,    நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர்  பிரசாந்த் மு.வடநேரே,  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள பெண்கள் பிரிவில் வருகைபுரிந்து பொது மக்களிடம் மருத்துவர்கள் நன்கு கவனிக்கின்றார்களா என்றும் சரியான முறையில் உரிய பரிசோதனை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்குகிறார்களா என்று கேட்டறிந்தார். மேலும் அங்குள்ள பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பதிவேடுகளை முறையாக மாதந்தோறும் பதிவு செய்து பராமரிக்க வேண்டுமென மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.  அதன்பின்னர் அங்குள்ள பகுதி மருத்துவர்கள் அறையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ள அறையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் முகத்துவராத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் பொது மக்கள் உள்ளே வருவதற்கு சிறிய நடைபாதை அமைத்து தர வேண்டுமென பண்ருட்டி வருவாய் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுரை வழங்கினார்.

கலெக்டர் ஆய்வு

அதன்பின்னர் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கு சென்று அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் எத்தனை நபர்கள் என்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளின் கற்றலின் திறமையினை படிக்க சொல்லியும், ஒரு தொகையினை மாணவ, மாணவிகளுக்கு கரும்பலகையில் எழுதி காண்பித்து அதனை பெருக்கினால்  என்ன விடை வரும் என கேட்டறிந்தார். அதற்கு மாணவ, மாணவிகள் சரியான விடையை தெரிவித்தார்கள். அப்போது சரியான விடையை கூறிய மாணவ, மாணவிகளை கலெக்டர் பாராட்டினாhர். மேலும் தினந்தோறும் வைக்கக்கூடிய தேர்வுத்தாளினை கலெக்டர்  பார்வையிட்டு அதற்குரிய பதிவு நோட்டில் பெற்றோர்களின் கவனத்திற்கொண்டு சென்று கையொப்பம் பெறுகிறீர்களா என ஆய்வு செய்தார்.  அதன் திருகண்டேஸ்வரத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்படும் பாடதிட்டங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் கோழிப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியினை கலெக்டர்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள வருகை பதிவேடு மற்றும் உள்ள பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்ன்ர் 7 ஆம் வகுப்பு சென்று அங்குள்ள மாணவ, மாணவிகளின் கற்றலின் திறமையை பரிசோதனை செய்யும் வகையில் பாடங்களை படிக்கச் சொல்லி கேட்டறிந்தார். தலைமையாசிரியரிடம் எத்தனை 6,7,8 ஆம் வகுப்பில் எத்தனை பிரிவுகள் உள்ளன என கேட்டதற்கு நான்கு பிரிவுகள் உள்ளன தெரிவித்தனர். மேலும் தேர்ச்சி விகித பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து தேர்ச்சியின் விகிதத்தை அதிகரிக்க நன்கு ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு பாடங்களை நன்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.  மாணவ, மாணவிகள் படிக்க சொல்லியதோடு அதனுடைய அர்த்தங்களையும் கேட்டறிந்தார். இப்பள்ளியில் உள்ள சமையற் கூடத்திற்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு தயார் செய்து வைக்கப்பட்டுள்ள உணவினை சாப்பிட்டு பார்த்து பரிசோதனை செய்தார். வருகை பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இப்பள்ளியில் குடிநீர் சேமித்து வைக்கும் தொட்டியினை தினந்தோறும் சுத்தம் செய்து குளோரினேஷன் செய்ய வேண்டுமென தலைமையாசிரியருக்கு அறிவுரை வழங்கினார். மேலும் பள்ளியின் சுற்றுப்புறங்களில் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என தலைமையாசிரியருக்கு அறிவுரை வழங்கினார்.அதன்பின்னர் மேல்பட்டாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை கலெக்டர்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகில் கரையான் குட்டையில் தேங்கியுள்ள  மழைநீர் மற்றும் கழிவுநீரினை நிரந்தரமாக வெளியேற்ற மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு  உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின்போது துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.ஜவஹர்லால், பண்ருட்டி வருவாய் வட்டாட்சியர் விஜய்ஆனந்த், நெல்லிக்கும் நகராட்சி ஆணையர் (பொ) எஸ்.மகாராஜன், மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், தலைமையாசிரியர்கள் எஸ்.ஹேமலதா, கோ.ஜோசப்ஜெயக்குமார், சுகாதார ஆய்வாளர் அன்புராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து